பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 0 அ. ச. ஞானசம்பந்தன் கோபம் என்பது தனி மனிதனுக்குத் தீங்கிழைக்கக்கூடிய ஒன்று. 'சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி” (306) என்றார் வள்ளுவப் பெருந்தகையார். இந்தச் சினங்கூடக் சில சமயங்களில் வேண்டப்படுவதாகும். பலருடைய நலனைக் கருத வேண்டிய அரசன், அப்பலர் நலத்திற்குக் கேடு செய்யும் சிலரைக் கோபிக்கத்தான் வேண்டி வரும். ஆகவே, முனிவுழி முனிந்து' என்று கூறினான். இவை அனைத்தையும் நன்கு செய்யும் அரசன்கூடப் பொரு வாசை காரணமாகப் பிறருக்குத் தீங்கிழைத்து விடுதல் கூடும். பொருளாசை அவ்வளவு எளிதில் விடக்கூடிய ஒன்றன்று. எனவே, கவிஞன், 'வெஃகும் இறை அறிந்து' என்று கூறினான். அரசன் எவ்வளவு வரிப்பணம் வாங்க வேண்டும் என்பது பற்றி இன்றுகூடத் திட்டமான முடிவு ஒன்றும் இல்லை. மக்களுடைய கொடுக்கும் சக்தி, அரசனுடைய செலவிடும் வழிகள், கால நிலை, சூழ்நிலை என்ற இவற்றை ஒட்டி மாறுபடும் இயல்புடையது வரி அளவு. எனவே, இவற்றையெல்லாம் உள்ளடக்கிக் கவிஞன் வெஃகும் இறை அறிந்து' என்று கூறிப் போனான். இந்த இடத்தில் அரசன் தன்மையைப் பற்றிக் கவிஞன் கிட்கிந்தா காண்டத்தில் அரசியற் படலம் 14ஆம் பாட்டில் கூறுவதை ஒப்பு நோக்கிக் கற்பது பயனுடைய தாகும். நாயகன் அல்லன்; கம்மை நனிபயந்து எடுத்து நல்கும் "தாய்' என இனிது பேணித் தாங்குதி தாங்கு வோரை! ஆயது தன்மை ஏனும் அறவரம்பு இகவா வண்ணம் தீயது வந்த போது சுடுதியால் தீமை யோரை!