பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O 51 அரசன் தான் ஒரு தலைவன் என்று கருதப்படக்கூடி யவனாய் இருந்துவிடக்கூடாது. ஈன்றெடுத்து ஊட்டி வளர்க்கும் தாய் இவன் எனக் கருதும்படி அன்பு நிறைந் தவனாக மக்களைப் பரிபாலிக்க வேண்டும். இதுதான் முறை என்றாலும், குற்றம் நேர்ந்த இடத்துக் குற்றம் புரிந்தோரை அறத்தினது எல்லை கடவாதபடி தண்டிக்கத் தயங்கக்கூடாது. அன்பு நிரம்பியவர் எனினும், அறத்தாறு செல்லவே அருங்கடன் அரசர்க்கு என்பதை நன்றாகப் புலப்படுத்துகிறான் கவிஞன்! - இத்துணைச் சிறப்பும் உடையானே அரசன் என்று மட்டும் கம்பநாடன் கூறியிருப்பானேயாகில், அவன் ஒரு சிறந்த அரசனைப் பற்றி மட்டும் கூறினவனாவானே தவிரத் தான் படைத்த கனவு நாட்டின் ஒப்பற்ற அரசனைப் பற்றிக் கூறினவன் ஆகமாட்டான். எனவே, அவன் கூறும் தனிச் சிறப்புடைய அரசனைப் பற்றிக் காண்போம்: - இவ்வொப்பற்ற மன்ன்ன் குடிகளுக்கு எவ்வாறு பயன் பட்டான் என்பதைக் கூற வந்த கவிஞன், தாய்லுக்கும் அன்பில், தவம்லுக்கும் கலம்ப யப்பில்; சேய்ஒக்கும் முன்னின்று ஒருசெல்கதி உய்க்கும். நீரால்; நோய்ஒக்கும் என்னின் மருந்துஒக்கும்; நுணங்கு கேள்வி ஆயப்புகுங்கால் அறிவொக்கும் எவர்க்கும் அன்னான். (171) 'குடிகளிடம் கைம்மாறு கருதாமல் அன்பு செலுத்தவி னாலும், அவர்கள் கேளாமலும் அவர்கட்கு வேண்டுவன வற்றைச் செய்தலினாலும் தாயாய் உள்ளான்; குடிகள் செய்த தவமாவான் அவர்க்கு நலஞ்செய்வதில்; அவர்களை முன்னின்று செலுத்தலின் மகன் போல்வான்;. குற்றம் உடையாரைத் தண்டித்தலால் நோயாவான்; தண்ணளி செய்தலின் மருந்து போல்வான்; அரசியல் தொடர்புள்ள