பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆசிரியன் முன்னுரை

 1953 வாக்கில் ‘கம்பன் கலை’ என்ற பொதுத் தலைப்பில் ‘நாடும் மன்னனும்’, அரசியர் மூவர்', ‘தம்பியர் இருவர்’ என்று மூன்று நூல்களை எழுதி வெளியிட்டேன். அதன் பின்னர் அம்மூன்று நூல்களும் எவ்விதமான மாற்றமும் பெறாமல் பல பதிப்புக்களாக வெளிவந்தன.

இந்த நாற்பதாண்டுகளில் இலக்கியத் திறனாய்வு, பன்மொழிக் காப்பியங்கள் ஆகியவற்றை பயிலும் வாய்ப்பும், அந்தக் கோணங்களிலிருந்து கம்பனை நோக்கும் வாய்ப்பும் கிடைத்தன. ‘சான்றோர்க் கவி’யெனக் கிடந்த கம்பநாடன் கவிதைகள் எவ்வளவு ஆழமும், பல வகையாக பொருள் கொள்ளும் பேராற்றலும் நிறைந்துள்ளமையை அறிய முடிந்தது. ‘கோசலம் என்னும் கனவு’ என்ற பகுதியில் கம்பனுடைய பாடல்கள் பெரும்பகுதி வான்மீகத்தை அடியொற்றி இருந்தும் அதனையும் மீறி உடையார் இல்லார் இல்லாத ஒரு சமுதாயத்தைப் படைக்க முன்வந்தது எவ்வாறு? என்பன போன்ற வினாக்கள் இக்காலக் கட்டத்தில் மனத்துள் நின்றன. பல்லவப் பேரரசு வீழ்ச்சியிடைந்து சோழப்பேரரசு தலையெடுக்கும் காலகட்டத்தில், ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றியவன் கம்பநாடன். அவன் காலத்திலும் உலகின் பிற பகுதிகளிலுள்ளது போல தமிழகத்திலும்