பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 0 அ. ச. ஞானசம்பந்தன் வற்றையும் பிறவற்றையும் ஆராயும்பொழுது அறிவு போல்வான் என்று கூறுமுகத்தான் சிறந்த அரசனுக்குரிய பண்பாடுகள் அனைத்தையுங் கூறி விட்டான். இத்தகைய அரசனை மக்கள் எவ்வாறு விரும்பினார்கள் என்பதை அறிய வேண்டாவா? அதற்கும் விடை கூற முற்படுகிறான் கவிஞன். மன்னனே இறைவன் அரசனைக் குடிகட்குத் தாய் என்று கவிஞன் கூறியது எத்துணைப் பொருத்தம் உடையது என்பதை ஆய்ந்து பார்த்தல் வேண்டும். அடைமொழி தாராமல் கூறி விட்டாலும், தலையாய தாய்மாரை மனத்துட்கொண்டே கவிஞன் கூறுகிறான். பால் நினைந்து ஊட்டுபவள்” அல்லளோ தலையாய தாய்? குழந்தை பசித்து அழுத பிறகு பால் தருபவள் இடைப்பட்டவள் அல்லளோ? தன் குடிமக்கட்கு வேண்டும் நலத்தை அவர் வாய்விட்டுக் கேட்குமுன்னரே செய்கிறான் கோசல நாட்டு மன்னன். அதுவும், சமயமறிந்து, அந்தச் சமயத்திற்கு வேண்டும் நன்மையின் திறம் அறிந்து செய்கிறானாம். இவ்வாறு செய்வதை அம்மன்னன், தான் மன்னவனாய்ப் பிறந்து விட்டமையின் தன் கடமை என்று நினைந்து செய்ய வில்லை; உள்அன்போடு செய்கிறான். அதிலும், ஒரு பொழுது ஒரு நன்மையைக் குடிமக்கட்குச் செய்துவிட்டுப் பின்னர் என்ன பயனை எதிர்பார்க்கலாம் என்று நினைப்பவர் உண்டு. கைம்மாறு கருதிச் செய்யப்படும் ஒரு நலம் நல்லதேயாயினும், சிறந்தது என்று கூறுவதற் கில்லை. எனவே, கோசல மன்னன் அன்பு, கைம்மாறு கருதாத அன்பு என்பதை வெளிப்படையாகக் கூறாமல், தாய் அன்பு என்றுமட்டும் கவிஞன் கூறிவிட்டான். அடுத்து, தவம் ஒக்கும் நலம் பயப்பில்," என்றான். குடிகள் விரும்பினாலும், சிலவற்றை உடன் செய்தல்