பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் C 53 ஆகாது. அதே செயலைச் சில நாள் கழித்துச் செய்தால் பெருநன்மை விளையலாம். இதனை அவர்கள் அந்த நேரத்தில் அறியார்களாயினும், பின்னர் அறிய முடியும். தவம், செய்தவனுக்குத் தப்பாமற்சென்று பயன் தருமேனும், அவன் விரும்பிய நேரத்தில் வருவதில்லை. எனவே, தசரதன் காலமறிந்து உதவி செய்தலின் ‘தவம் ஒக்கும்,' என்று கூறப்பட்டான். பிள்ளைகளைப் பற்றிக் கூற வந்தான் ஒரு கவிஞன். 'இந்த உலகத்திலும் இசையொடு வாழ்ந்து மறு உலகத் திலும் இடம் பெறுவார் யார் எனில் பகைவரும் கண்டு விரும்பத்தக்க குற்றமற்ற நல்ல பண்பாட்டை உடைய குழந்தைகளைப் பெற்றவரே, என்னும் கருத்துப்பட, இம்மை உலகத்து இசையொடும் விளங்கி மறுமை உலகமும் மறுஇன்று எய்துப - செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச் சிறுவர்ப் பயந்த செம்ம லோரே (அகநானூறு, 66) எனப் பாடினான். எனவே, கோசல மக்கள் இம்மையிலும் புகழுடன் வாழ்ந்து, மறுமை இன்பமும் விடாமற் பெறப் பேருதவி செய்கிறான் அம்மன்னன் எனில், அம்மன்னன் அவர்கட்கு மகன் போன்றுள்ளான் என்று கவி கூறுவதில் தவறில்லை அன்றோ? மகன் போலவும் தாய் போலவும் மட்டும் இருந்துவிட்டால் மன்னன் கடமை முற்றுப் பெற்றுவிடுமா? எனவே அவன் கடமையை நிறைவேற்றும் பொழுது நோயாகவும் காட்சி அளிக்கிறான். உடம்பில் நோய் எப்பொழுது வருகிறது? ஏன் வருகிறது? தகாத செயல்ைச் செய்தால் நோய் வருவது உறுதி. உண்ட உணவு சீரணியாமல் இருக்கவும், மேலும் உண்டால் தவறு அன்றோ? அப்பொழுது அசீரணமாய் நோய் வருகிறது. அந்நோய் கண்ட பொழுது யாரும் உண்ண