பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 O அ. ச. ஞானசம்பந்தன் மாட்டார்; பட்டினி கிடப்பர். அந்த நிலையில் நோய் தானாகவே நீங்கிவிடும். எனவே அசீரணமாகிய நோய் வரும் பொழுது துன்பம் போலக் காணப்படினும், பிறகு நன்மையையே செய்கிறது. அதேபோலக் குற்றம் செய்தவர்களை மன்னன் தண்டிக்கிறான்; ஆனால், அவர் கட்குக் கொடுமை செய்யவேண்டும் என்ற நோக்கத்தால் அன்று; அவர்களைத் திருத்திப் பணி கொள்ளும் நோக்குடனேயே தண்டனை அளிக்கிறான். எனவே, தண்டனை தரும் பொழுது அது கொடுமை உடையதாகக் காணப்படினும், பின்னர் நன்மை விளைக்கவே பயன் படுகிறது. ஆதலின், நோய் ஒக்கும்’ என்றான் கவிஞன்; அடுத்து மருந்து ஒக்கும்’ என்றும் கூறுவதால் நாட்டிற்கு நன்மை தருவது எனில், அந்த நேரத்தில் மக்கள் அதை விரும்பாவிடினும் அவன் செய்யத் தவறுவதில்லை என்ற குறிப்பைப் பெற வைக்கிறான். மருந்து உண்ணும் பொழுது கடுங்கசப்பாய் இருப்பினும், பின்னர் நன்மை விளைப்பது போல, அவனும் மக்கள் அந்த நேரத்தில் விரும்பவில்லை எனினும், பிற்பயத்தல் கருதி நலம் செய்கிறான் என்றான். இறுதியாக, நுணங்கு கேள்வி ஆயப்புகுங்கால் அறிவு ஒக்கும் என்று கூறியது மிகச் சிறந்ததாகும். நுட்பமான பொருள்களையும், பிறர் வாயிலாய்க் கேட்ட செய்திகளையும் ஆராயும்போது இன்றியமையாதது எது? மனிதன் விலங்கு இனத்திலிருந்து வேறாகப் பிரிக்கப்படுவது எதனால்? ஆராயும் அறிவாலே தான் அன்றோ? அந்த அறிவாய் விளங்குகிறானாம் அம்மன்னன். . கம்பநாடன் காலமாகிய ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பின்னரும் தமிழ் நாட்டில் முடியாட்சிதான் நிலைபெற்று இருந்தது; முடியாட்சியிலும் பரம்பரையாய் அரசுரிமை இறங்கி வரும் முடியாட்சியே நிலைபெற்றிருந்தது. ஆகலின், மன்னனைப் பொறுத்தவரை அவன் முழுவன்மை பெற்ற கடவுளாகவே மதிக்கப் பெற்று வந்தான்.