பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O 57 சங்க காலத்துக்குப் பின் மன்னனுக்குரிய இத் தனிச் சிறப்பு சங்க காலத்தி லிருந்த தமிழ் மக்களால் ஒப்புக்கொள்ளப் பெற்ற ஒன்றாகும். இன்னும் பிற்காலத்திலும் இக்கருத்தே தமிழ் நாட்டில் நிலவி வந்தது என்பதற்குப் பின்னர்த் தோன்றிய இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. "மன்பதை காக்கும் நன்குடி' (காட்சிக் காதை, 103) என்று சிலப்பதிகாரம் பேசு கின்றது. பத்தாம் நூற்றாண்டினதாய சீவக சிந்தாமணி' இக்கருத்தை, - உறங்கு மாயினும் மன்னவன் தண்ஒளி கறங்கு தெண்திரை வையகம் காக்குமால் (248) என்றே கூறிச் செல்கிறது; உடல் இளைப்பாறும்பொழுது உயிர் உறங்காமல் இருந்து உடலைக் காக்குமாறு போல அரசன் குடிகளைக் காண்கிறான்; அவனுடைய ஆணை காக்கிறது' என்பதே இப்பாடலின் பொருள். அடுத்துப் பன்னிரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய பெரிய புராணமும், ... * மண்ணில் வாழ்தரு மன்னுயிர் கட்குளலாம் கண்ணும் ஆவியும் ஆம்பெருங் காவலன் (திருநகரச்சிறப்பு, 14) என்றே கூறுகிறது. மக்கள் பொருட்டு ஆட்சி செலுத்தும் ஒரு மனிதனை அவர்கள் விருப்பின் வண்ணம் ஆளுபவன் என்று கருதாமலும், கூறாமலும், அதற்கு மறுதலையாக அவர்கள் தலைவன் என்றும் உயிர் என்றும் கண் என்றும் கூறுவது அக்காலத்தில் தமிழர் தம்முடைய அரசனை எவ்வாறு கருதினர் என்பதை நமக்கு வலியுறுத்துகிறது. இம்மட்டோ? ஒரு நாடு அரசன் இல்லாமல் வாழ