பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 O அ. ச. ஞானசம்பந்தன் முடியாது என்றுகூட அன்றைத் தமிழர் நினைத்தனர். சங்கப் புலவராய பரணர், தம் காலத்தில் ஒரு காட்சியைக் காண்கிறார். சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் என்ற சேர மன்னனும், வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி என்ற சோழனும் தம்முள் சண்டையிட்டு இருவருமே போர்க் களத்தில் இறந்துவிடுகின்றனர். போரிடுபவர்கள் இறந்து படுதல் இயற்கைதான். எனினும், புலவராய பரணர், இவ்வரசர்களை இழந்த இவர்களுடைய நாடுகள் எவ்வாறு, வருந்தும் என நினைந்து அந்நாட்டுக்காகத் தாம். வருந்துகிறார். சாந்தமை மார்பில் நெடுவேல் பாய்ந்தென வேந்தரும் பொருதுகளத்து ஒழிந்தனர்; இனியே என்னா வதுகொல் தானே கழனி ! யாணர் அறாஅ வைப்பில் காமர் கிடக்கைஅவர் அகன்றலை காடே! (புறம், 63): அரசன் இறந்துபடின் நாடு வருந்தும் என்று நினைப்பது, அவனை உயிர் என்று கருதும் கருத்துக்கு இசையவே அமைந்துள்ளது. சங்ககாலத்தில் காணப்படும் இதே கருத்து, சேக்கிழார் பெருமானாலும் வலியுறுத்தப் பெறுகிறது. மன்னனை இன்றி வைகும் மண்ணுலகு எண்ணும் காலை இன்னுயிர் இன்றி வைகும் யாக்கையை ஒக்கும் என்பார் என்று அப்பெருமான் மூர்த்தி நாயனார் புராணத்தில் (29) பாடுகிறார். ஒரு பாத்திரத்தின் கூற்றாக இவ்வடிகள் அமைந்திருப்பினும், சோழப் பேரரசின் முதலமைச்சர் இவ்வாறே கருதியிருப்பார் என்று நினைப்பதில் தவறு