பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O 59' இல்லை. சேக்கிழாருக்கு முற்பட்டுச் சங்க காலத்திற்குப் பிற்பட்டு வந்த நம்மாழ்வாரும் 'திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே என்னும்,' (திருவாய் மொழி, 4-ஆம் பத்து; 7-ஆம் பாடல்) என்று பாடுகிறார். ஆகலின், தமிழர் கருத்தேயாகும் இது என்பதில் தடை இல்லை. கம்பன் புரட்சி சங்ககாலத்தில் தொடங்கிப் பிறழாது வரும் இக்கொள்கை, முதன் முதலாகக் கம்பநாடனால் உடைத்து ஒதுக்கப்படுகிறது. இன்று நம்முட் பலராலும் மகிழ்ந்து ஏற்றுக் கொள்ளப்படும் குடியாட்சி'க்கு அவனால் வித்திடப்படுகிறது. 'குடியாட்சி என்ற சொல்லை, அவன் பயன்படுத்தவில்லை என்பது உண்மையே. ஆனால், குடியாட்சியின் உட்பொருளை நன்கு அறிந்து அதனை அவன் கூறுகிறான். மக்கள் ஆட்சியில் உள்ளதாகப் பறை சாற்றப்படும் மாண்புதான் என்ன? இத்தகைய ஆட்சியில் அரசன்’ என்ற பெயரில் லாமல் தலைவன்’ என்ற பெயரில் ஒரு தலைவன் உண்டு. அற்றைநாள் அரசனுக்குரிய அனைத்து அதிகாரங்களும் இக்குடியாட்சியில் உள்ள தலைவனுக்கும் உண்டு. அவ்வாறாயின் இருவருக்கும் வேற்றுமையே இல்லையா? இருக்கத்தான் செய்கிறது. எந்த மக்களைப் பழைய கால மன்னன் ஆட்சி செய்தானோ, அந்த மக்கள் அந்த மன்னனை விரும்பினாற்கூட நீக்கவியலாது. அவனாக இறந்தால் ஒழிய, அவன் செங்கோலனாயினும், கொடுங் கோலனாயினும், அம்மக்கட்கு விடுதலை இல்லை. ஆனால், இற்றை நாள் குடியாட்சித் தலைவன் இவ்வாறு அமைந்தவன் அல்லன். மக்கள் விரும்புகிற வரை அவன் தலைவன்; விரும்பாவிடில், அவனை அப்பதவியினின்று மக்கள் நீக்கிவிடலாம். இதுவே, அடிப்படையில் இருவருக்கும் உள்ள வேற்றுமை. மக்கள் விரும்புகிற வரை.