பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 O அ. ச. ஞானசம்பந்தன் தான் அரசனாக ஒருவன் இருந்தான் என்றால், அவனை மக்கட்கு உயிர் என்று எவ்வாறு கூற முடியும்? உடம்பு விரும்புவதை உயிர் செய்வதில்லையன்றோ? உயிர் விரும்புவதையன்றோ உடம்பு செய்கிறது! எனவே, மக்கள் விருப்பப்படி மன்னன் இருக்கிறான் என்றால், அவனை உடம்பு என்று கூறி, அவனால் ஆளப் படும் மக்களை உயிர் என்று கூறுவதுதான் முறையாகும். இம்மாதிரி பல காலமாகக் கூறப்பட்டு வந்த உவமையை மாற்றிவிடுவதால் கம்பநாடன் அரசியல் உலகில் ஒரு பெரும் புரட்சியைச் செய்துவிடுகிறான். வழக்கமாக மன்னனை உயிர் என்றும் மக்களை உடல் என்றும் உருவகித்த முறையை மாற்றி, ஆணையிடும் உயிராக மக்களையும், ஆணையின் வண்ணம் ஒழுகும் உடம்பாக மன்னனையும் ஆக்கிய பெருமை கம்பநாடனுக்கே உரியது. - அதிலும், பெரிய சக்கரவர்த்தியாகிய தசரதனை அல்லவா இப்படி வெற்றுடம்பாகச் செய்துவிட்டான் கம்பன்! - - - வயிரவான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான் உயிர்எலாம் தன்னுயிர் ஒப்ப ஓம்பலால் செயிர் இலா உலகினில் சென்று கின்றுவாழ் உயிர்எலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான் (177) தசரதனை உடம்பாக உருவகித்தது மட்டுமல்லாமல், அவ்வுடம்புக்குக் கட்டளையிடும் உயிர்களாக அக்கவிஞன். கூறியவை மக்களுடைய உயிர்கள் மட்டுமல்ல; 'சென்று நின்று வாழ்உயிர் எலாம்' என்று கூறியதால், அஃறிணை உயர்திணை ஆகிய இருவகை உயிர்களையும் தசரதனை ஆட்டிப்படைக்கும் உயிர்களாகக் கூறிவிட்டான். இந்தக்