பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O 61 கருத்தை மேலும் வலியுறுத்த வேண்டி இன்னும் விளக்க மாக அயோத்தியா காண்டத்தில், வையம் மன்னுயி ராக.அம் மன்னுயிர் உய்யத் தாங்கும் உடல்அன்ன மன்னவன் (1423) என்று தெளிவுறுத்துதல் ஒப்பிட்டு உணர வேண்டுவ தாகும். இவ்வாறு கூறுவதால், மக்கள் விருப்பம்போல ஆட்சி செய்தான்', என்பதும் பெற்றாம். மேலும், குறிப்பாக, அவர்கள் விரும்பியதாலேயே அரசனாய் இருக்கவியன்றது என்பதும் பெற்றாம். அரசியல் அமைப்புக்களைக்கூடக் கவிஞன் தனது "தீர்க்கதரிசனத் தன்மையால் Prophetic power பன்னுாறு ஆண்டுகட்கு முன்னரே காண முடிகிறது என்ற கொள்கைக்குக் கம்பநாடனுடைய இந்த இரண்டு அடிகள் நல்ல சான்றாகும். - -