பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலட்சிய நாடும் நகரமும் தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை நாடு, நகரம் பற்றிய வருணனைகள் மிகுதியாக உள்ளன. சங்கப் பாடல்களில் மதுரைக் காஞ்சி, பட்டினப் பாலை என்னும் இரண்டும் நகர வருணனையை உயர்வு நவிற்சியோடு மிகச் சிறப்பாகக் கூறுகின்றன. * இவை முறையே மதுரையையும் காவிரிப்பூம் பட்டினத்தையும் பாட எழுந்தவை. இந்த ஊர்களை விரிவாக வருணிப்பதற்கு முன்னர் இவ்வூர்களைச் சுற்றி யுள்ள இடங்களையும் ஒரளவு விவரித்துள்ளன. இவற்றுள் நாடு, நகர் என்று எடுத்துக்கொண்டு தனிப் பட்ட நாடாக ஒரு பகுதியைப் பிரித்து, வருணிப்பதற்கு உதிரிப் பாடல்களான சங்கப் பாடல்களில் அதிக வாய்ப்பு இல்லை என்பதனை அறியலாம். என்றாலும், ஐந்தினைப் பிரிவை அடிப்படையாகக் கொண்டு நில வருணனை செய்வதன்மூலம், நாட்டு வருணனையையும் , அந்தப் பெயர் இல்லாவிட்டாலும், பாடியுள்ளார்கள் என்பது தெளிவு. இங்கு நாட்டை அரசியல் அடிப்படையில் பிரிக்கவில்லை. இந்த அடிப்படைதான் பின்னர்த் தோன்றிய -காப்பியங்களுக்கு நாடு, நகர வருணனை செய்ய அடித் தளமாக அமைந்தது. சங்கப் பாடல்களில் வரும் நில