பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 O அ. ச. ஞானசம்பந்தன் பார்த்தல் நியாயமில்லை; என்றாலும், மலைவருணனை, மருதநில மக்கள் வருணனை என்பவைபற்றி ஆங்காங்கே சுட்டிச் செல்கின்றன திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல்கள். - முழுமையாக, காப்பிய வடிவில் முதன்முதலில் தோன்றியது கம்ப நாடனின் இராமாவதாரக் காப்பியமே ஆகும். சங்க இலக்கியங்களில் துளையமாடிய கம்பநாடன், நாட்டையும் மக்களையும் தனித் தனியே வருணிக்க வேண்டும் என்ற புதுமையை முதன்முதலில் புகுத்து கிறான். மன்னராட்சி நன்கு வளர்ந்து செம்மைப்பட்ட நிலை யில் கம்பன் தோன்றியவன்; ஆதலின், கோசல நாட்டை யும் அயோத்திமா நகரத்தையும் வருணிப்பதில் பெருங் கவனம் செலுத்துகிறான். தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்லாமல் ஏனைய மொழிக் காப்பிய இலக்கியங்களிலும் காணப்படாத சில புதுமைகளைக் கவிச் சக்கரவர்த்தி தன் காப்பியத்தில் புகுத்துகிறான். - சங்க இலக்கியங்களில் வரும் இயற்கை வருணனை, மக்கள் வருணனை என்பவற்றுள் தன்மை நவிற்சி அணியே இடம் பெற்றுள்ளமையைக் காணலாம். மருதநில மக்கள், நகர மக்கள் என்ற வேறுபாட்டை மதுரைக் காஞ்சி முதலிய நூல்களில் காணலாமேனும், எப்படி வாழ்ந்தார்களோ அதனை அப்படியே கவிஞர்கள் பாடியிருப்பதைக் காண முடியும். - 'சுவர்க்க நீக்கம்' (PARADISE LOS7) தெய்வீக இன்பியல் (D/WWE COMEDY) போன்ற காப்பியங்களில் முறையே சுவர்க்கம், நரகம் என்பவற்றின் வருணனை களும் இத்தாலிய நாட்டின் ஒரு பகுதி வருணனையும், இடம் பெற்றிருக்கக் காணலாம்.