பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O 65 சுவர்க்க, நரக வருணனைகள் முற்றிலும் கவிஞனின் கற்பனை; ஆகலின், பிறவற்றோடு ஒப்புமை காண வழி யில்லை. தெய்வீக இன்பியல் நூலில் தாந்தே (DAWTE) நகர வருணனை, நரக வருணனை என்று அடுத்தடுத்துக் காட்டுவது மேனாட்டு இலக்கிய வளர்ச்சியில் ஒரு கூறாகும். எந்த வகையில் பார்த்தாலும் நாடு நகர வருணனை செய்யும்பொழுது இயற்கைக்கும் நடைமுறைக்கும் மாறு: படாமல், அதே நேரத்தில் ஈடு இணையற்ற இலட்சியத் தன்மை வாய்ந்த நாடு, நகரம் என்பவற்றைக் கம்பன் படைத்ததுபோல வேறு எந்தக் காப்பியமும் (தமிழில்கூட) படைக்கவில்லை. - - பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த தாமஸ் மூர் "உட்டோப்பியா' (UTOPIA) என்ற பெயரில் ஒரு கற்பனை நாட்டைப் படைக்கிறார். உட்டோப்பியா'வில் ஒரு நகர அமைப்பு, அந்நகரில் வாழ்கின்ற உ ழ வ ர், தொழிலாளர் முதலியோர் வாழ்க்கை முறை, நீதி பரிபாலனம், ஒருவர்க்கொருவர் நட்புக்கொண்டு வாழும் இயல்பு, பிறரிடம் அம்மக்கள் கொள்ளும் உறவு முறை போல்வனவற்றைப் பற்றி விரிவாகப் பேசியுள்ளார். இவர் (தாமஸ் மூர்) எந்த அளவு கம்பனைப் பின் பற்றிச் செல்கிறார் என்பது கற்று மகிழ வேண்டிய பகுதியாகும். - , *, நிலம், பொழுது இரண்டனையும் முதற்பொருள் ன்ன்று தொல்காப்பியர் கூறியிருப்பினும், நாடு என்று சொல்லும்பொழுது ஏனையோரைப் போல இத்தமிழர்கள் நிலம், இயற்கை என்பவற்றை முதன்மையாகக் கொள்ள் வில்லை என்று நினைய வேண்டி உள்ளது. - 5 سمسييه