பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 0 அ. ச. ஞானசம்பந்தன் நாடு ஆக ஒன்றோ, காடு ஆக ஒன்றோ; அவல் ஆக ஒன்றோ, மிசை ஆக ஒன்றோ; எவ்வழி கல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை; வாழிய நிலனே ! (ஒளவையார்) புறநானூறு-187 இப் புறப்பாடல் மூலம் அவ்வளவு பழைய காலத்திலேயே ஒரு நாட்டின் சிறப்பு அங்கு வாழும் மக்களைப் பொறுத்தது என்பதனை இத்தமிழர்கள் அறிந் திருந்தனர் என்று யூகிக்க முடிகின்றது. நாட்டில் வாழுகின்ற மக்களும் அரசர்களும் செம்மை வழி நிற்கவில்லை என்றால், பிற வளங்கள் எவ்வளவு இருந்தாலும் அவற்றால் பயனில்லை என்று மற்றொரு புறப்பாடல் கூறுகின்றது. வேந்தரும் பொருது, களத்து ஒழிந்தனர், இனியே என் ஆவது கொல் தானே- கழனி ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் பாசவல் முக்கி, தண்புனல் பாயும், பாணர் அறாஅ வைப்பின காமர் கிடக்கை அவர் அகன்தலை நாடே? - (புறநானூறு- 63) இந்த அடிப்படையில் பார்த்தால் நாடென்ப நாடா வளத்தன; காடல்ல நாட வளந்தரு நாடு - (திருக்குறள்- 789) என்று ೧r@ರ್ಖ கூறும்பொழுது 'நாடா வளத்தன என்பதற்கு உழைக்காமல் பெறுகின்ற செல்வம்' என்று