பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O 67 குறிப்பிடும் உரையாசிரியர் கூற்றுக்கு மேலும் ஆழமான பொருள் உண்டோ என்று நினைக்கத் தோன்றுகின்றது. நாடு என்ற அதிகாரத்தின் முதற் பாடலில் தள்ளா விளையுள்' பற்றிக் கூறிய வள்ளுவர், அடுத்துத் தக்கார் என்று கூறுவதன் மூலம் இக்கருத்தை வலியுறுத்து கின்றார். - விளைச்சல் முதலியவற்றை 1, 2, 6, 8 ஆய குறட்பாக் களில்- (இயற்கை வளம்) பேசிய வள்ளுவர், ஏனைய பாக்களில் மக்கள் (மன) வளத்தையே பேசுகிறார். வளத்தன என்பது அஃறிணை முற்றே ஆயினும், உயர்திணைக்கு உரிய முடிபாகப் பொருள் கொள்ள லாமோ என்றும் தோன்றுகிறது. சிறந்த நாடு, மண் வளத்தால் தள்ளா விளையுள் பெற்றிருப்பது போல, மக்கள் மன- வளம் இயல்பாகப் பெற்றிருக்க வேண்டும். அதனைத்தான் நாடா வளம் என்று சொல்கின்றாரோ என்றுகூட நினைக்கத் தோன்று கிறது. - - எத்துணை வளம் இருப்பினும் மக்கள் மனவளம் இல்வழி அது பயனற்றதாகும் என்று கருதிய தமிழர், அந்த இயற்கை வளத்திற்குக்கூட மக்கள் மனவளமே காரணம் என்று கருதினதாக நினைக்க முடிகிறது. சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளையுட்டு ஆகக் காவிரி புரக்கும் காடு கிழவோனே (பொருநர்-246-8). இவ்வடிகள் இவ்வாறு நினைக்கத் துண்டும். ஆக என்ற வினை எச்சம் புரக்கும் என்ற பெயரெச்சத்த்ோடு இயைவதைப் பார்த்தால் இந்த