பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6.8 C அ. ச. ஞானசம்பந்தன் விள்ைச்சலுக்குக் காரணம் சோழனுடைய ஆட்சிச் சிறப்பே என்று ஆசிரியர் பெற வைக்கிறார். இக்கருத்துக்களையெல்லாம் நன்கு சீரணித்துக் கொண்ட கம்பநாடன், சங்கப் புலவர்களும் ஏனையோரும் காணாத ஒரு கற்பனை நாட்டை பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த தாமஸ் மூர் கான முயன்ற நாட்டைப் படைக்க முயல்கிறான். வேடிக்கை என்னவென்றால், அவன் தனக்கு மூல நூலாகக் கொண்டதாகக் குறிப்பிடும் வான்மீகத்தில் நாட்டைப் பற்றி ஒரே ஒரு வரிதான் உள்ளது. பழைய தமிழ் மரபுப்படி தான் புதிதாகக் கண்ட ஒன்றனைக்கூடத் தான் கண்டதாகக் கூறாமல் ஆங்கு அவன் புகழ்ந்த நாட்டை அன்பெனும் நறவம் மாந்தி மூங்கையான் பேசலுற்றான் என்ன யான் மொழியல் உற்றேன் (32). என்றே பாடுகிறான். எனவே, வான்மீகியும் தமிழ்ப் புலவர்களும், ஏன் மேனாட்டு புலவர்களும் கற்பனை செய்யாத ஒரு நாட்டை, நகரைக் கம்பன் அமைக்கின்றான். நாட்டின் சிறப்பைக் கூறும்பொழுது மண்வளத்தை விட, மக்க்ள்-மன-வளத்தைப் பெரிதாகப் பாடிய புறப் பாடலோ, திருக்குறளோகூட கம்பன் மக்களின் தலையாய பண்பு என்று எடுத்த எடுப்பிலேயே, பெரிதாகப் போற்றும் ஒரு பண்பைச் சுட்டிக் காட்டியதாகத் தெரிய வில்லை.