பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் C 69 உட்பகையின்மை, மடியின்மை, பெருமுயற்சி என்பவற்றை அடிப்படைப் பண்புகளாக, நாட்டு மக்களின் இலக்கணமாகக் கூறும் இடத்தில் வள்ளுவர் "புலனடக்கத்தை உயர்த்திப் பாடவில்லை. இவர்கள் யாரும் கூறாத முறையில் ஆசலம் புரி ஐம்பொறி வாளியும் காசு அலம்பும் முலையவர் கண் எனும் பூசல் அம்பும் நெறியின் புறஞ் செலாக் கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம் (12) என்று கூறும்பொழுது, ஏனையோரைவிடக் கம்பன் மிக உயர்ந்து காணப்படுகிறான் என்பதை அறிய முடிகிறது. வள்ளுவர் காலத்தில் தமிழருடைய நாகரிகமும் வாழ்வு முறையும் மிகச் சிறந்து வளர்ந்திருந்தன என்பதில் ஐயமில்லை. ஆனால், சமுதாய வாழ்க்கை, நகர வாழ்க்கை என்பவை ஒன்பதாம் நூற்றாண்டில் வளர்ந்திருந்தது போல் இரண்டாம் நூற்றாண்டில் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. - எனவேதான், மெய்யுணர்தல்', 'அவா அறுத்தல்” முதலிய அதிகாரங்களை அறத்துப்பாலில்', "துறவறவிய லில் வைத்தாரோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. சிறிய கிராமங்கள், ஒரளவு வளர்ச்சி அடைந்த சிறு நகர்கள் என்பவைதாம் சங்க காலத்தில் மிகுதியாக இருந்திருக்க வேண்டும். மதுரை, காவிரிப்பூம்பட்டினம், உறையூர் போன்ற நகர்கள் விரல் எண்ணிக்கையில் அடங்குவனவாகவே இருந்தன. - எனவே, அதிகப்படியான மக்கள் கூடி வாழும் பெரு நகரம், அதனில் இயல்பாகத் தோன்றும் போட்டிச் சமுதாயம் (Competitive Society) என்பவற்றால் விளை