பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 0 அ. ச. ஞானசம்பந்தன் யும் ஊறுகளைப் பல்லவர் காலத்தை அடுத்து, சோழா காலத் தொடக்கத்தில் வாழ்ந்த கம்பநாடன் நன்கு அறிய முடிந்தது. எனவே, வள்ளுவன் அமைக்காத முறையில், சங்கப் புலவர்கள் கற்பனை செய்யாத வகையில் நாடு நகர் பற்றிக் கூறத் தொடங்கும் பொழுதே, பொறிகள் புறஞ்செலா மக்கள் வாழ்கின்ற கோசலம் என்று அமைக்கின்றான். தமிழ், வடமொழி, இன்னும் பிற மொழிக் காப்பியங் கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு பார்த்தாலும் நாட்டு வருணனையில் மக்கள் சிறப்பைச் சொல்லும் பொழுது பொறிகள் புறஞ்செலா மக்கள் வாழ்கின்ற நாடு' என்று பாடியவன் கம்பன் ஒருவனேயாவான். பல பாடல்களில் இயற்கை வருணனையை ஈடு இணையின்றிப் பேசுகிறான் கம்பன் என்பதனை அறிவோம். அவற்றுள் இரு பாடல்கள் நம் சிந்தனையைத் துரண்டுவனவாகவே உள்ளன: சேல் உண்ட ஒண்கணாரில் திரிகின்ற செங்கால் அன்னம், மால் உண்ட களினப் பள்ளி, வளர்த்திய மழலைப் பிள்ளை, கால் உண்ட சேற்றுமேதி கன்று உள்ளிக் கனைப்பச் சோர்ந்த பால் உண்டு, துயில, பச்சைத் தேரை தாலாட்டும் பண்ணை ஈரர்ே படிந்து இந்நிலத்தே சில கார்கள் என்ன, வரும் கருமேதிகள், ஊரில் நின்ற கன்று உள்ளிட மென்முலை தாரை கொள்ளத் தளிர்ப்பன சாலியே (44, 56) இவ்விரு பாடல்களும் நாட்டு நடைமுறையில் ஒரு சிறப்பான பகுதியைக் குறிக்கின்றன.