பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O 71 மேய வந்த எருமைகள், நன்கு மேய்ந்த பிறகு ஊரில் உள்ள தம் கன்றுகளை நினைக்கின்றன. அந்நினைவு தோன்றியவுடன் அவற்றின் மடியில் இருந்து பால் சுரக்கின்றது. இவ்வாறு ஒழுகிய பால் அன்னத்தின் மழலைப் பிள்ளை உண்பதற்கும், சாலி நெல் நன்கு தழைத்து வளர்வதற்கும் காரணமாக, அமைகின்றது. ஆனால் சாலியும், அன்னக் குஞ்சும் உண்பதற்காக அவ்வெருமைகள் இப்படிப் பாலைத் தரவில்லை. எங்கேயோ இருக்கின்ற கன்றை நினைத்ததால் சுரந்த பால் எருமையோடு எவ்விதத் தொடர்பும் இல்லாத நெல்லுக்கும் அன்னக் குஞ்சுக்கும் பயன்படுகிறது என்று கவிஞன் பாடுவது வெறும் கற்பனையாக மட்டும் தோன்றவில்லை. - சமுதாயத்தின் மேட்டுக் குடியினராகிய பெருவணிகர், பெருந் தொழிலதிபர் என்பவர்கள் ஒரு வணிகத் தொழிலையோ தொழிற்சாலையையோ தொடங்கி நடத்துகிறார்கள் என்றால், அது அவர்களும் அவர்கள் குடும்பத்தாரும் அவர்கள் மக்களும் பயனடைய வேண்டும் என்ற கருத்தினாலேயே யாம். - பெருவணிகம் என்பது சில நூறு பேருக்கும், பெருந் தொழில் என்பது சில ஆயிரம் பேருக்கும் வாழ்வளிப்ப தாக அமைகின்றதை இன்றும் காண்கிறோம். இப்பெரு மக்கள் தம் குடும்பம், உறவினர் என்பவர் வாழ்வு கருதித்தான் தொழிலைத் தொடங்குகிறார்கள். ஆனால், அதனால் பயனடையும் ஆயிரக் கணக்கானவர் தொழில் முதல்வருடன் எவ்விதத் தொடர்பும் உடையவர் அல்லர். -