பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 0 அ. ச. ஞானசம்பந்தன் அதேபோலச் சாலியும் அன்னக் குஞ்சும் எருமையுடன் எவ்விதத் தொடர்பும் பெற்றிராவிடினும் அதன் பயனை அனுபவிக்கின்றன. வளமுடைய பெருங்குடி மக்கள் மேலும், மேலும் தம் தொழின் முறையைப் பெருக்குவதன் மூலம் பலருக்கு வாழ்வளிக்க வேண்டும் என்ற கருத்தும் கம்பருடைய இவ்விரு பாடல்களிலும் அமைந்து கிடக்கின்றது என்னலாம். r இவ்வாறு பாடுவதனை இலக்கியத் திறனாய்வாளர் குறிப்பு (Suggestion) என்று கூறுவர். மேலை நாடுகளில் வாஷிங்டன், நியூயார்க், லண்டன் நகரங்களில் குற்றங்கள் பெருகுவதற்கான காரணங்களை ஆய்ந்த உளவியலார் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள சிறுவர்கள் இளைஞர்கள் ஆகியோர் பொழுது போக்கு வதற்கோ விளையாடுவதற்கோ அறிவு வளர்க்கும் கல்வியைப் பெருக்கிக் கொள்வதற்கோ வாய்ப்பும் வசதியும் இல்லாக் காரணங்களாலேயே அவர்கள் தம்முள் சண்டை இடுதல், சிறு சிறு குற்றங்கள் இழைத்தல் முதலியவற்றில் ஈடுபடுகின்றனர் என்று கண்டு கூறி யுள்ளனர். ஆகவே, நகர அமைப்பில் சிறார்கள், குழந்தைகள், மகளிர், இளைஞர்கள்- வாழ்வை வளர்த்துக் கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ள நேரம் போக- எஞ்சிய நேரங்களில் சிறந்த முறையில் பொழுதுபோக்க விளையாட்டரங் கங்கள் முதலியன அமைதல் வேண்டும் என்னும் தற்கால அறிவியலார் கூற்றை மெய்ப்பிப்பது போல் அமைந்துள்ள பாடல்: பந்தினை இளையவர் பயில் இடம்,- மயில்.ஊர் கந்தனை அனையவர் கலை தெரி கழகம்,