பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. மன்னன் அயோத்தி வேந்தன் தசரதன் சிறப்பு கம்ப ராமாயணம் என்னும் பெருங்காப்பியத்தில் அளவால் மிகச்சிறு பகுதியைப் பெற்றவன் தசரதன். பாலகாண்டத்தின் முற்பகுதியில் தோன்றி, அக்க காண்டத்தின் இறுதியில் சில வார்த்தைகள் பேசும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கிறது. அயோத்தியா காண்டத்தின் முற்பகுதியில் மூன்று படலங்களிலும் அவனுடைய செயல்களே நிறைந் துள்ளன. ...' அடுத்து வரும் பகுதியில் அவன் இறந்து விடுகிறான். பத்தாயிரம் பாடல்கட்கு மேல் உள்ள அப்பெருங் காப்பியத்தில் காப்பியத் தலைவனின் தந்தையாகிய அவன் பெறும் இடம் சிறிதுதான். ஆம். இராமகாதையில் தயரதனுக்குப் பேரளவு இடம் கொடுக்கமுடியாதுதானே? எனினும், அப்பெருங்காதை நிகழக் காரணமாகிற.