பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 0 அ. ச. ஞானசம்பந்தன் பெருமை அவனைச் சேர்ந்தது. அறுபதினாயிரம் ஆண்டு (அதாவது நெடுங்காலம்) ஆட்சி செய்ததாகக் கூறப்படும் அவன், எல்லாவகை வலியாலும் மேம்பட்டவன் என்பதை அறியமுடிகிறது. தசரதனைப் பேரரசனாகவும், கணவனாகவும், தந்தையாகவும் கம்பநாடன் நமக்குக் காட்டுகின்றான். அவனுடைய செயல் ஒவ்வொன்றிலும் இம்மூன்று நிலை களும் மாறி மாறி வருகின்றன. அரசியற்படலத்திலேயே அவனது அரச இயல்பைப் பற்றிக் கூறுகிறான் கவிஞன். ஒரு நாட்டின் அரசன், தந்தைக்கு மைந்தனாய்ப் பிறந்த காரணத்தால் மட்டும் அரசனாகிவிடுதல் தவறு. அரசனாதற்குரிய இயல்புகளும் அவன்பாற் பொருந்தி யிருத்தல் வேண்டும். அவ்வியல்புகளுள் தலையாய இயல்பு கல்வி என்பதாகும். இதனாலன்றோ வள்ளுவப் பெருந்தகையார், இறைமாட்சியின் அடுத்த அதிகாரமாகக் கல்வியை வைத்துள்ளார்! கோசல நாட்டு மக்களே கல்வியிற் சிறந்தவர்கள் என்றால், அந்நாட்டு மன்னனைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமா? என்றாலும், தனியே அரசனுடைய கல்வி பற்றியும் பேசப்படுகிறது. எண்ணில் நுண்ணுல் ஆய்ந்தே கடந்தான் அறிவென்னும் அளக்கர், (172) என்ற அடியால் அரசன் கல்விப் பெருக்கம் பேசப்படுதல் அறியப்படும். இத்துணைக் கல்விப் பெருக்கமும் ஏட்டளவில் நின்றுவிடாமல், அம் மன்னனுக்கு வாழ்க்கை யிலும் பயன்பட்டதை நாம் அறிகிறோம். தான் அரச னாகப் பிறந்தமையின் தன் கடன்கள் அதிகப்பட்டன என்பதை உணர்ந்து, அதற்கேற்பவே வாழ்ந்தான் அத் - திருவுடைமன்னன். தாய்ஒக்கும் அன்பில்; தவம்ஒக்கும் கலம்ப யப்பில்; சேய்ஒக்கும் முன்னின்று ஒருசெல்கதி உய்க்கும் நீரால்; நோய்ஒக்கும் என்னின் மருந்துஒக்கும்; நுணங்கு கேள்வி ஆயப் புகுங்கால் அறிவுஒக்கும் எவர்க்கும் •ari, ) - (171