பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O 77 என்ற இப்பாடலால் அவ்வரசன் கற்ற கல்வியின் வண்ணம் ஒழுகினான் என்பதை அறிய முடிகிறது. ஏட்டுக்கல்வி மட்டும் அல்லாமல், நுணங்கு கேள்வி யாகிய செவிச் செல்வமும் பெற்றிருந்தமையின், பண்பாடு மிகுவதாயிற்று மன்னனுக்கு. அப்பண்பாட்டால் குடிகட்கும் தனக்கும் உள்ள உறவு முறை எது என்பதைத், தெரிந்துகொண்டான் தசரதன். - நாட்டில் பகை இன்மையால் சில சந்தர்ப்பங்களில் நாட்டை ஆள்பவர் கவலை இன்றித் திரிய இடமுண்டாகி விடுகிறது. ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை விண்ணப்பம் செய்து நம்மிடம் வந்து வாக்குரிமை பெற வேண்டும் என்ற கட்டுப்பாட்டில் இருக்கும் பொழுதுகூட நம்மால் தேர்ந்தெடுத்து நாடாள அனுப்பப்படுபவர்கள், தேர்தல் முடிந்தவுடன் தங்கள் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விடுகின்றார்கள். இவ்வாறல்லாமல், பரம்பரை உரிமை யாக அரசியல் கிடைத்துவிடுமாயின், அரசன் ஓயாது குடி நலன் காப்பதற்குத் தூண்டுகோல் யாதுளது? ஒரு வேளை, பகைவர்கள் இருப்பார்களாயின், அவர்களுக்கு, அஞ்சியாவது நல்லாட்சி நடத்துவன். பகைவர் இல்லாத பொழுதும் ஒர் அரசன் செவ்வண் ஆட்சி செய்தான் எனில், அதற்கு அவன் பண்பாடு தவிர வேறு காரணம். ஒன்றும் இருத்தற்கில்லை. இதனை மனத்துட்கொண்ட கவிஞன், - * எய்என எழுபகை எங்கும் இன்மையால் மொய்பொருந் தினவுஉறு முழவுத் தோளினான் வையகம் முழுவதும் வறிஞன் ஒம்பும் ஓர் செய்எனக் காத்துஇனிது அரசு செய்கின்றான் (179). என்று கூறுகிறான். எல்லை மீறிய செல்வமும் மனிதனைக் கெடுத்துவிடும். அதிகாரம் கெடுக்கும்; எதேச்சாதிகாரம்