பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 O அ. ச. ஞானசம்பந்தன் முழுவதும் கெடுத்தேவிடும்,' என்று ஆக்டன் பிரபு கூறியதும் "எங்கு செல்வம் குவிகிறதோ, அங்கு அழிவும் தொடங்கு கிறது,' என்று கோல்ட்ஸ்மித்து என்ற பெரியார் கூறியதும் பணத்தின் பெருக்கம் பாவத்தின் பெருக்கம் 7 என்று மகாத்துமா காந்தியடிகள் கூறியதும், பட்டம் பதவிகெட்ட மாயை' என்று பாரதியார் இசைத்ததும் நினைவில் இருத்தி நாம் இப்பாடலை நோக்க வேண்டும். அறுபதினாயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்யும் ஒருவன் செம்மையாக ஆளுவான் என்பது கூறவியலாதது. அதிலும், அவன் அதிகாரத்தைத் தடை செய்யக்கூடிய பகைவரும் இல்லை எனில், கேட்க வேண்டுமா? எல்லை யற்ற அதிகாரம், நீண்ட ஆட்சிக்காலம் என்ற இரண்டுள் ஒன்று இருந்தாலுமே ஒர் அரசன் கெட்டுவிட முடியும். ஆனால், தசரதனுக்கு இவை இரண்டும் இருந்துங்கூட அவன் கெடவில்லை என்கிறான் கவிஞன். கெடாது இருந்துவிட்டால் மட்டும் போதுமா? பிறருக்கு நலன் தீங்கு என்ற இரண்டுமே செய்யாத பலர் உண்டே! அது போல இம்மன்னனும் மக்களுக்கு நலத்தையோ தீங்கையோ செய்யாமல் இருந்துவிட்டானோ?’ என்பார் ஐயத்தைப் போக்கப் பின் இரண்டு அடிகளைக் கவிஞன் குறித்துவிட்டான். தசரதன் நாட்டை ஆள்வது, வறிஞன் ஒருவன் தனக்குரிய ஒரே நன்செய்யைக் காப்பது போல இருக்கிறது, என்றான். உவமையாகிய இதில் வைத்த சிறப்பெல்லாம் தசரதன் ஆட்சிக்குச் சென்று சேர்கிறது உவமை இலக்கணப்படி. - 5 “Power corrupts and absolute power corrupts absolutely.'— Lord Aucton - 6 Where wealth accumulates there man decay— Goldsmith - 7 Accumulation of wealth is accumulation of sin-- Gandhiji