பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O 79. உவமையின் பொருள் ஒருசெய்’ என்பது, அளவால் மிகச் சிறிய இடமாகும்; அத்துடன் உரமிட்டு, நீர் பாய்ச்சி, களை எடுத்து, நன்கு உழைத்துப் பாடுபட வேண்டிய நன்செய் நிலத்தைக் குறிப்பதுமாகும். இந்த இடத்திற் பயிர் செய்து அதில் வரும் வருவாயை நம்பியே வாழ்கிறான் ஒருவன். வறிஞன் என்றதால், அவன் வாழ்வுக்கு இந்நிலத்தை யன்றிப் பிறிதொரு வழியும் இல்லை என்பது பெறப்படும். எனவே, அவன் எவ்வளவு முயன்று இதனைப் பாது காப்பான் என்பது வெளிப்படை. இவ்வுவமையில் பெறப் படும் மற்றொரு பொருளும் உண்டு; வறிஞனுக்கு உவமை யாகத் தசரதனும் நிலத்துக்கு உவமையாக வையகமும் காட்டப் பெற்றுள்ளனர். நிலத்தை நன்கு காக்கவில்லை யாயின், அதனால் விளையும் தீமை வறிஞனுக்கே அன்றி, நிலத்துக்கு அன்று. அதுபோல, நாட்டை நன்கு காவா விடில் நாட்டுக்குத் தீமை இல்லை; மன்னனுக்கே தீங்கு நேரிடும்’ என்பதன்றோ பொருளாகும்? இஃது உண்மையா? உண்மையில் மன்னன் தவறு இழைப்பா னாயின், மக்களன்றோ அல்லல் அடைவார்கள்? இவ், உவமையில் ஏற்படும் இப்பிழையை அறியாமலா கவிஞன் பயன்படுத்தினான்: அன்று. நாட்டை நன்கு காவாவிடில், அதனால் விளையும் பயனைக் கண்டு நாட்டு மாந்தர் வருந்துவதைக் காட்டிலும் மன்னனாகிய அவன் வருந்தினான். இவ்வாறு பிறர் பெறுந் துயரைத் தான் பெறுவதாக நினைந்து வருந்தின மன்னன் ஆகவின், வேண்டுமென்றே கவிஞன் இந்த உவமையைக் கையாள். .கிறான். இத்தகைய அரசனை நினைக்கும்பொழுது பாரதியார் பாடிய அடிகள் நினைவுக்கு வருகின்றன. நாட்டு மாந்தர் எல்லாம் தம்போல் கரர்கள் என்று கருதா ஆட்டு மந்தை யாம்என்று உலக அரசர் எண்ணிவிட்டார் (பாஞ்சாலி சபதம்).