பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 0 அ. ச. ஞானசம்பந்தன் என்று அவர் எவ்வளவு மனம் நொந்து பாடினார்: அத்தகைய மன உளைச்சல் இல்லாமல் பிறர் விரும்பி ஏற்றுக் கொள்ளக்கூடிய மன்னனாகத் தசரதன் விளங்கினான் என்பது வெளிப்படை. இந்த உவமையால் இன்னும் பல பொருள்களையும் கவிஞன் விளக்கி விட்டான். நிலத்தைப் பாதுகாப்பவன் தினந்தோறும் அல்லும் பகலும் அதே கவலையாய் இருந்து பாதுகாத்தல் வேண்டும். நிலத்துச் சொந்தக்காரன் நேரில் சென்று கவனிக்காத நிலம் முழுப் பயன் தாராது என்பதை, செல்லான் கிழவன் இருப்பின் கிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும் - (1039) என்ற குறளால் வள்ளுவர் குறிக்கிறார். இவ்வாறுள்ள .நிலத்தை உவமையாகக் கூறினமையின், தசரதன் நாள் தோறும், அல்லும் பகலும், அரசாட்சியைக் கண் எனக் காத்தான் என்பதும் கூறினானாயிற்று. மேலும், நிலத்தை நிலக்கிழவன் நேரே சென்று பார்த்தல் போலத் தசரதனும் காட்சிக்கு எளியனாய் கடுஞ்சொல்லன் அல்லனாய்' (குறள், 386) வாழ்ந்தான் என்பதும் பெறப்பட்டது. மாணா உவகையன் 'இத்துணைச் சிறந்த மன்னன், மனைவி மக்களிடம் எவ்வாறு இருந்தான்? என்பது அடுத்துக் கவனிக்கப்படல் வேண்டும். தசரதன் மனைவி மாட்டுக் கொண்ட அன்புக்கு எல்லையே இல்லை என்னலாம். அவன் அருமை மனைவி கைகேயி கீழே விழுந்து பூ உதிர்ந்த கொம்பு போலக் கிடப்பதைக் கண்டு அவன் பட்ட பாட்டைக் கவிஞன் நன்கு வருணிக்கிறான். பெருந்துயரத்தைத் திடீரென்று எதிர்ப்பட்டவர்கள் கையுங்காலும் எழாமல் தவிப்பது போன்று அவனும் அல்லல் உறுகிறான். அவன் துயரம் எதனால் ஏற்பட்டது என்பதை அறியுமுன்னரே பெரிய,