பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O 81 பேச்சுக்கள் பேசுகிறான்; உனக்கு இத்துயரம் இழைத் தவர் யாவராயினும், அவர் என் வாளுக்கு இரையாவர்,” என்றும் பேசுகிறான். அன்னது கண்ட அலங்கல் மன்னன் அஞ்சி, ‘என்னை நிகழ்ந்தது? இவ் வேழு ஞாலம் ஆள்வார் உன்னை இகழ்ந்தவர் மாள்வர் உற்றது எல்லாம் சொன்னபின் என்செயல் காண்டி; சொல் இது என்றான். (1499) தன் மனைவியாகவே இருப்பினும், அவள் அழுதாள் எனின், காரணம் யாது என்று தெரிந்த பின்னர் இவ்வாறு கூற வேண்டுமே தவிரக் காரணம் அறியுமுன்னர்ப் பேசுவது அரசனாகிய அவனுக்கு இழுக்கையே தரும். 'ஞாலம் ஆள்வார் மாள்வர்!’ என்று அவன் கூறியது. நாடகக் குறிப்பாக (Dramatic irony) அமைந்து விட்ட தன்றோ? இவ்வார்த்தையின் பொருள் அறியாமல் அவன் பேசிவிட்டான். இறுதியில் நடைபெற்றதென்ன? அவளுக்குத் தீங்கு செய்தவன் அவனேயாகிறான். அதன் பயனாகவே அவன் இறக்கவும் நேரிடுகிறது. எனவே, அவன் கொண்ட எல்லை மீறிய காதலும் அவனுக்குத் தீங்கு விளைவிப்பதை அறிகிறோம். மனைவியிடம் மட்டும் அவன் எல்லை மீறிய காதல் கொண்டான் என்று கூறுவதற்கில்லை. அவன் தான் பெற்ற பிள்ளைகளிடமும் இவ்வாறே அன்பு செலுத்துகிறான். இவறலும் மாண்பு இறந்த மானமும் மாணா உவகையும் ஏதும் இறைக்கு (432) என்ற குறளின்படி பிற குற்றங்களை அவன் செய்யவில்லை. எனினும், மாணா உவகை அவன் அழிவிற்குக் காரணம் ஆயிற்று. இனி வள்ளுவர், - க- t