பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 0 அ. ச. ஞானசம்பந்தன் காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல் (440) என்று கூறிய அறவுரையும் அம் மன்னனால் மறக்கப் பெற்றுவிட்டது. அதாவது, அரசன் தான் மிகுதியும் விரும்பும் பொருள் யாது என்பதைத் தன் பகைவர் அறியாதபடி காக்க வேண்டும். அவ்வாறு காவானாயின், அப்பகைவர் அவன் மிகுதியும் விரும்பும் பொருள் வழியாகவே அவனை வஞ்சிப்பர்,” என்பது கருத்து. இக்குறளும் தசரதன் அளவில் உண்மையாகி விட்டதை அறியலாம். அவன் மைந்தர் நால்வர் எனினும், மூத்தவ னாகிய இராமன்மேல் கழிபெருங்காதல் கொண்டவன் மன்னன். 'மைந்தனை அலாது உயிர்வேறு இலாத மன்னன் (1514) என்று கூடக் கூறும் அளவுக்கு இராமன் மேல் அவன் கொண்டிருந்த அன்பைப் பிறர் அறியுமாறு நடந்து கொண்டான். இதனால், வஞ்சனைக் கூனி இராமனைக் காட்டுக்கு அனுப்பி, அதனால் தசரதன் உயிரையே குடித்துவிட்டாள். -