பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசுவாமித்திரன் வருகை மைந்தர் மாட்டுத் தசரதன் கொண்ட அன்பு பல முறை சோதனைக்கு உள்ளாகிறது. ஒரு நாள் அரசன் அரண்மனையில் விசுவாமித்திர முனிவன் வந்து தோன்று கிறான். அவனைக் கண்டவுடன் தசரதன் மிக்க வணக்கத் துடன், பிரமதேவனைக் கண்ட தேவேந்திரன் போல, மிக விரைந்து எழுந்து, மணிகள் பூண்ட தன் மார்பு நிலத்தில் தோய வணங்கினான்; முனிவனை இருக்கச்செய்து, எண் ணரிய உபசரணைகள் செய்தான். இதிலிருந்து தவத்தால் மேம்பட்ட பெரியோர்களிடம் தசரதன் கொண்டிருந்த பெருமதிப்பு வெளியாகிறது. அவன் விசுவாமித்திரனிடம் மட்டும் இவ்வாறு நடந்துகொண்டான் என்பதில்லை; கலைக்கோட்டு முனிவன், தன்னிடம் என்றுமே தங்கியுள்ள வசிட்ட முனிவன் ஆகிய அனைவரிடமும் இவ்வாறே பெரு மதிப்புடன் நடந்துகொண்டமை அறிதற்பாலது. புதிய வர்களாய் வருபவர்களிடம் அன்பு காட்டினது ஒரு புறம் இருக்க, ஒயாது தன்னுடன் பழகும் வசிட்டனிடமும் எப்பொழுதும் இம் மரியாதையுடன் நடந்துகொண்டது அவன் பெருந்தன்மையை மட்டுமன்றித் தெளிந்தோர்ப் பேணும் சீர்மையையும் காட்டுகிறது. ஏன் ஏனில், மிகுதி யும் பழகும் ஒருவரிடம் அளவு கடந்து விடாமல், மரியாதை குறையாமல் பழகுவது அவ்வளவு எளிதான தன்று. மிகுந்த பண்பாடு உடையவர்கட்கே இது இயலும், எனவே, தசரதன் பண்பாட்டுக்கு இதுவும் ஒர் எடுத்துக்