பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிே 0 அ. ச. ஞானசம்பந்தன் காட்டு இந்நிலையில் உள்ள ஒருவன் கோசிகனாகிய விசுவாமித்திரன் வந்தபொழுது எத்துணை அன்புடன் அவனை உபசரித்திருப்பான்! இவன் உபசாரத்தால் கோபக்காரனாகிய அம்முனிவனே பெரிதும் மகிழ்ந்து விட்டான். மேலும், அம்முனிவர்பிரான், உன்பால் ஒரு பயன் கருதி வந்தேன்,' என்று கூறினவுடன் தசரதன் பெற்ற மகிழ்ச்சி எல்லை கடந்து விட்டது. உரைசெய்யும் அளவில் அவன் முகநோக்கி உள்ளத்தில் ஒருவராலும் கரைசெய்ய அரியது.ஒரு பேருவகைக் கடல்பெருகக் கரங்கள்கூப்பி அரைசெய்தி இருந்தபயன் எய்தினென் (323) என்று கூறினான். இம்மனநிலையும் எளிதில் வருவ தொன்று அன்று. பிறருக்குப் பயன்படுவர் பலர். ஆனால், அனைவரும் விருப்பத்தோடு அவ்வாறு செய் கின்றனர் என்று கூறுவதற்கில்லை. சிலர் வேறு வழி இல்லாமல் பயன்படுவர்; இன்னுஞ்சிலர் அதில் வெறுப்புக் கொள்ளாமல் பயன்படுவர்; ஆனால், ஒரு சிலர் பயன்படு கிறோமே என்ற மகிழ்ச்சியால் மனம் மகிழ்ந்து பயன் படுவர். தலையாய மனிதர் இயல்பு இம்மூன்றாம் வகையைச் சேர்ந்ததேயாம். அரசனாய் இருப்பது முறை வேண்டினர்க்கும் குறை வேண்டினர்க்கும் அருளுவதற்கே என்று தசரதன் நினைத்திருந்ததால் அன்றோ இவ்வாறு கூறினான்? . . . - இவ்வளவு மகிழ்ச்சியுடன், யாது செய்யவேண்டும்?" என்று வினாவிய அரசனுக்கு முனிவன் கூறிய விடை பெருந்தொல்லையாய் முடிந்தது. தருவனத்துள் யான் இயற்றும் தவவேள்விக்கு இடையூறாத் தவஞ்செய் வோர்கள் வெருவரச்சென்று அடைகாம வெகுளி என கிருதர் இடை விலக்கா வண்ணம்