பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O 85 'செருமுகத்துக் காத்தி' என கின்சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத்தந் திடுதி' என உயிர்இரக்கும் கொடுங்கூற்றின் உளையச் சொன்னான் (324) தசரதன் சங்கடம் கழிபெருங்காதல் கொண்ட தசரதனுக்கு நல்ல சோதனையாகும் இது. கேட்டவன் சாதாரண மனிதன் அல்லன். இந்திரனோடும் போட்டி இட்டு, மற்றோர் இந்திரலோகத்தை படைப்பேன்! என்று தொடங்கிய கோசிகன் கேட்கையில் எவ்வாறு இல்லை என்பது? அதிலும் முனிவன் அதிகார தோரணையிற் கேட்கவில்லை; மன்னனைத் தந்திடுதி என இரந்து வேண்டுகிறான். தான் எத்தகைய பொருளைக் கேட்கிறான் என்பதை அறியாத முனிவன் மிகவும் கெஞ்சித்தான் கேட்கிறான். எனினும், அது கூற்றுவன் அழைப்புப்போல இருக்கிறது தசரதனுக்கு. அதிலும் உரிமையுடன் உயிரை விரும்பினா லும் விரும்பாவிட்டாலும் எடுத்துச் செல்லும் இயல்புடைய எமன், ஒருவனுடைய உயிரைப் பிச்சை யாகக் கேட்பின் என்ன செய்வது? அதனாலேதான் கவிஞன், உயிர் இரக்கும் கொடுங்கூற்று' என்ற உவமையைக் கூறினான். இந்நிலையில் அரசன் யாது செய்வான்? அவன் நிலைமை தரும சங்கடமான நிலைமை யாகிவிட்டது முனிவன் கேட்ட பொருளை இல்லை என்று கூறுவதும் தவறு; துணிந்து கூறிவிட்டாலும், அவன் கோபம் என்ன செய்யும் என்று கூறவியலாது. ஆனால், அவன் விருப்பப்படி இராமனைத் தந்துவிடலாம் எனில், அதைவிடத் தன் உயிரையே தர மன்னன் விரும்பு கிறான். அறுபதினாயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்தும், பன்னுாறு மனைவியரை மணந்தும் இறுதிக்காலம் வரை