பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 0 அ. ச. ஞானசம்பந்தன் பிள்ளை இல்லாமல் இருந்து, கடைசியில் எண்ணரிய தவஞ்செய்து, வேள்வி செய்து பெற்று, அப்பிள்ளை யினிடத்துத் தன் உயிரையே வைத்திருக்கும் ஒரு தந்தைக்கன்றோ இந்த அருமை தெரியும்! கோசிகன் சொற்களை கொடுங்கூற்றத்தின் சொற்கள் என்று தசரதன் நினைத்தான். அவ்வாறு நினைக்க கோசிகன் சொற்கள் கொடுமை வாய்ந்தவையா என்பதைச் சற்று நின்று நிதானித்தால் தசரதன் மனநிலை யைப் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படும். பெரிய முகவுரையுடன் தொடங்கிய கோசிகன் நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத்தந் திடுதி” என்று தானே கேட்டான். தசரதன் பிள்ளைகள் நால்வர் என்று கோசிகனே குறிப்பிடுகிறான். அந்த நால்வரில் இரண்டு பேர் சிவப்பு நிறமுடையவர்கள். ஏனைய இருவர், பரதனும் இராமனும் கரிய நிறமுடையவர்கள். இதை நினைவில் வைத்துக் கொண்டால் கோசிகனுடைய வேண்டுகோளில் இராமனை மட்டும் குறிப்பிடக் கூடிய சொல் எதுவுமில்லை. 'நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி என்றால் இச்சொற்கள் பரதனை யும் குறிக்கலாமல்லவா? அப்படியிருக்க கரிய செம்மல் என்ற சொல்லைக் கேட்டவுடன் இராமனை மனத்துள் கொண்டு தசரதன் ஏன் கலங்க வேண்டும்? புத்திரர் நால்வர் என்ற எண்ணமே தசரதன் மனத்தில் ஒரு சிறிதும் இருந்ததாகத் தெரியவில்லை. இராமன் ஒருவனைத் தவிர ஏனைய மூவரையும் ஒரு பொருட்டாகவே அவன் நினைத்ததாகத் தெரியவில்லை. நான்கு புதல்வர்களிலும் மூத்தவன் மேல் ஓரளவு அதிக பாசம் கொண்டவனாக இருந்திருப்பின் இன்னார் என்று தெளிவாகக் குறிப்பிடா மல் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி” என்று கோசிகன் கேட்டவுடன் இதோ பரதனை அனுப்புகிறேன்' என்று தசரதன் கூறியிருக்கலாம். அவ்வாறு கூறியிருப்பின் விசுவாமித்திரன் ஒன்றும் செய்திருக்க முடியாது. தசரதன்