பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O 87 ஏன் இவ்வாறு கூறவில்லை? மைந்தன் நால்வரைப் பெற்றும் இராமனைத் தவிர ஏனைய மூவரையும் அறவே மறந்துவிட்ட காரணத்தால்தான் கரிய செம்மல் என்ற வுடன் இராமன் நினைவிற்கு வருகிறான். இந்த அதீத வாத்சல்யம் (அளவு கடந்த பிள்ளை பாசம்) தான் பின்னர் அவன் உயிருக்கே உலை வைக்கப் போகின்றது. நாம் கூறும் இக்கருத்து கம்பனுடைய கருத்துமாகும் என்பதை மைந்தன் அலாது உயிர் வேறு இலாத மன்னன்’ (1514) என்று பின்னர்க் கம்பனே கூறுவதால் உறுதிப்படும். எனவே, எண்இலா அருந்தவத்தோன் இயம்பியசொல் மருமத்தில் எறிவேல் பாய்ந்த புண்ணில் ஆம் பெரும்புழையில் கனல்நுழைந்தால் எனச்செவியில் புகுத லோடும் உண்ணிலா வியதுயரம் பிடித்துஉந்த ஆருயிர்கின்று ஊசல் ஆடக் கண்ணிலான் பெற்று இழந்தான் எனஉழந்தான் கடுந்துயரம் கால வேலான் (325) [தயரதன் மனநிலையையும், முன்னர்ச் சாபத்தையும் எண்ணிப் பாராத கோசிகன் சொற்கள் வேல் பாய்ந்த புண்ணில் கனல் நுழைந்ததுபோல வருத்த, உள்ளே துயரம் பிடித்து உந்த, உயிர் ஊசலாட, கண் இல்லாதவன் பெற்று இழந்ததை ஒப்ப வருந்தினான் மன்னன்.) முனிவன் ஒரு வினாடியிற் கேட்ட வார்த்தைகள் அரசனை எவ்வாறு துன்புறுத்தின என்பதைக் கவிஞன் நன்கு எடுத்துக் காட்டுகிறான். ஏற்கெனவே புண்ணிருந்த பெரிய துளையில் கனல் நுழைந்தது போல இருந்தனவாம் அவன் சொற்கள். வயோதிகத்தில் பெற்ற பிள்ளை யாகலின், பிள்ளையின் உண்மை வன்மையை அறிந்து கொள்ளக்கூடவில்லை மன்னனுக்கு. இராமனை இன்னும்