பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 O அ. ச. ஞானசம்பந்தன் குழந்தையாகவே கருதி, அவன் பிரிந்து வெளியே சென்றிருக்கும் பொழுதெல்லாம் அவனுக்கு என்ன ஊறு நேர்ந்ததோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறான் மன்னன். சிறு பிரிவைக்கூடப் பொறாமல் மனம் வருந்தும் மன்னனைப் பார்த்துப் பிள்ளையைக் கொடுத்து விடு' என்று கேட்டால், அவன் என்ன பாடுபடுவான்! அதுவும் அரக்கர்களுடன் போர் புரிவதற்காக இந்த இளம் பிள்ளையை அனுப்பு' என்று கேட்டால், அதனைவிடக் கொடிய செயல் வேறு யாது? கண்ணே இல்லாதவன் கவலை, ஐயோ! கண்ணில்லையே!” என்ற ஒரே கவலை தான். ஆனால், இடையில் ஒருமுறை கண் கிடைத்து அதனால் இவ்வழகிய உலகைக் க ண் டு களித்துக் கொண்டிருக்கும்போது அவன் கண் போய்விடுமானால் அவன் எவ்வளவு வருந்துவான்! அந்த நிலையிலேதான் அரசனும் இருந்தானாம். நெடுங்காலம் பிள்ளைப்பேறு இன்மைக்கு வருந்தி இருந்த மன்னன் பிள்ளைகளைப் பெற்றான். அதனால் இன்பம் பெறுகிற வேளையில் அப்பிள்ளைகள் அவனிடமிருந்து பிரிக்கப்பட்டு விட்டால் அவன் மனம் என்ன பாடுபடும்! இதனையே கண்இலான் பெற்று இழந்தான் என உழந்தான் கடுந்துயரம்,' என்கிறான் கவிஞன். சாதாரண மனிதனானால், துயரம் வரும் பொழுது அதனை எதிர்த்துப் போராட முடியாமல் வருந்துவது இயற்கை. ஆனால், துயரத்தைத் தடுக்கக் கூடிய வன்மையுடையவர் வருந்த நேரிட்டால், அது பெருந்துன்பமன்றோ? அதைக் குறிக்கவே கவிஞன் 'காலவேலான்' என்று அடைமொழி தருகின்றான். எந்தப் பகையையும் எதிர்த்துப் போராடும் வேலாயுதத்தை உடைய மன்னன் இந்தத் துயரத்தை எதிர்க்க முடியாமல் துன்புற்றான் என்பதே இங்கு உள்ள பொருள் நயம். - - -