பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் 0 89 சதுரப்பாடான விடை ஆனால், தான் படுந்துயரத்தை எடுத்து முனிவனிடம் கூறுதலும் முறையன்று என்று நினைந்த மன்னன், மிக்க வணக்கத்துடன், 'ஐயனே, படை வன்மை பயிலாத இராமனா இக்காரியஞ் செய்ய வல்லான்? யானே நீங்கள் விரும்பியபடி வந்து உங்கள் வேள்வியை முடிக்க உதவுவேன்,' என்கிறான். தொடை ஊற்றின் தேன்துளிக்கும் நறுந்தாரான் ஒருவண்ணம் துயரம் நீங்கிப் - 'படைஊற்றம் இலன், சிறியன் இவன்; பெரியோய்! பணி இதுவேல் பணிநீர்க் கங்கை புடையூற்றும் சடையானும் நான்முகனும் புரந்தரனும் புகுந்து செய்யும் இடையூற்றுக்கு இடையூறாய் யான்காப்பன் பெருவேள்விக்கு எழுக' என்றான் (326) (மாலையணிந்த மன்னன் துயரம் நீங்கி, முனிவரே, இராமன் சிறியவன்; உம் ஆணைப்படி யானே வந்து இறைவனும், நான்முகனும், இந்திரனும் தடுத்தாலும் அவர்களைத் தடுத்து உமது வேள்வியை நடத்தி வைக்கின்றேன்; எழுக' என்றான்.) இதுகேட்ட கோசிகன் கொண்ட பெருஞ்சீற்றத்தால் திசைகளும் இருண்டன; தேவர் அஞ்சினர். இத்தகைய ஒரு நிகழ்ச்சி நிகழ்ந்துவிடக்கூடாது என்றுதான் அரசன் அஞ்சினான். ஆனால், அவன் அஞ்சியது நிகழ்ந்தே விட்டது. கோசிகன் கோபங் கொள்வான் என்று தெரிந் திருந்தும் மன்னனை இவ்வாறு கூறத் துண்டியது யாது? பிள்ளைகள் மாட்டு அவன் கொண்டிருந்த அளவு மீறிய பற்றுத்தான் என்பதில் ஐயமின்று. கோபித்த கோசிகன் சாபம் ஏதாவது இட்டிருப்பின், தசரதன் கதி என்ன