பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 0 அ. ச. ஞானசம்பந்தன் ஆகும்? இது தெரியாதா மன்னனுக்கு தெரிந்திருந்தும் இப்பிழையைச் செய்ய வேண்டுமானால், இப்பிழைக்குக் காரணமான அவன் மக்களன்பின் ஆழத்தை என்ன என்று கூறுவது! இந்த இக்கட்டான நிலையைச் சரிப்படுத்த நல்ல வேளையாக வசிட்டமுனிவன் அருகிலிருந்தான். உடனே அவன் விசுவாமித்திரன் கோபத்தை தணித்துவிட்டு, அரசனை நோக்கி, மன்ன, உன் மகன் பெறப்போகும் உயர்ந்த பேறுகட்கு நீ தடையாக இருக்கலாமா?' என்று கேட்டு, அவன் மனத்தை அமைதியடையச் செய்தான். இரண்டு முனிவர்களும் கூடி, நீ இன்னதுதான் செய்ய வேண்டும்,' என வற்புறுத்தும்பொழுது பாவம்! தசரதன் யாது செய்ய இயலும்? உடனே ஒருவனைக் கேட்ட முனிவ. னிடம் இணை பிரியாத மைந்தர் இருவரையும் வர வழைத்து, அடைக்கலம் தந்துவிட்டான். விசுவாமித்திரன் எத்துணை அன்புடன் அவர்களைப் பராமரிப்பான் என்பது அறிந்திருந்தும், பிள்ளைகளை அவனிடம் ஒப்படைக்கையில், "ஐயன்மீர், இனி இப்பிள்ளைகட்குத் தந்தை நீர்; தனித்தாயரும் நீர்,' என்று கூறியன்றோ அனுப்புகிறான்? எனவே, அவன் பிள்ளைப் பாசத்திற்கு, அளவின்மை காண்கிறோம் இவ்விடத்தில். இவனா தசரதன் ! இதனை அடுத்து இராமனைத் தசரதன் காண்பது அவன் திருமணத்தின்போதேயாகும். இராமன் வில் முறித்த காட்சியைத் தசரதன் பார்க்கவில்லை. எனவே, மைந்தனது வீரம்பற்றி அறிய வாய்ப்பே இல்லாமற்போய் விட்டது அவனுக்கு. மணமக்களை அழைத்துக்கொண்டு அயோத்தி வரும் வழியில் சற்றும் எதிர்பாரா விதமாகப் பரசுராமன் வந்துவிடுகிறான். அவன் வருங் கோலமே அச்சத்தை விளைக்கிறது. அவனைக் கண்டவுடன் தசரதன் குஞ்சைக் காக்கும் கோழிபோல முன்வந்து, அவன் அடி