பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O 91. களில் வீழ்ந்து உபசரிக்க முயல்கிறான். ஆனால், பரசு ராமனோ தசரதனைக் கண்ணெடுத்தும் பாராமல், இராம னிடம், 'நீ சீதையை மணக்க நீ முறித்த சிவனுடைய வில் முன்னரே இற்றுப்போனது. இதோ! முடிந்தால் இந்த வில்லை வளைத்துப் பார்,' என்றான். இது கேட்ட இராமன் விடை கூறுமுன் தசரதன் தன்மதிப்புச் சிறிதும் இன்றி, "ஐயன்மீர், உமக்குச் சிவனே இணை இல்லை யெனில் எம் போன்றார் ஒரு பொருளா? இவ்விராமனும் யானும் உமது அடைக்கலம், எளியேமாகிய எங்கள்பால் உமக்கு ஏன் இத்துணைக் கோபம்?' என்றான். அவன் அன்னது பகரும் அள வையின்மன்னவன் அயர்வான் "புவனம் முழு வதும்வென்று ஒருமுனி வற்கு அருள் புரிவாய்! சிவனும் அயன் அரியும் அலர்; சிறுமானிடர் பொருளோ? இவனும்எனது உயிரும்உனது அபயம்இனி!' என்றான் - (1281). இவ்வாறு கூறுவது அவன் மகன்மேல் கொண்ட பற்றையே அறிவுறுத்துகிறது இங்கும் இராமனையும், தன் உயிரையும் இணைத்துப் பேசுவது மனத்தில் கொள்ளப்பட வேண்டுவதாகும். பரசுராமனிடம் தசரதன் பேசும் சொற்களைக் கேட்கும் நமக்கு அவனிடம் ஒர் இரக்கம் உண்டாகிறது. தேவர்கள் தலைவனாய இந்திரனுக்கு வந்த இடுக்கண். களைந்தவன் இவனா!' என்று ஐயுறுகிறோம். சம்பரா சுரனைப் போர் தொலைத்து இந்திரனுக்கும் அவனது பதவியை நிலைபெறச் செய்த பெருவீரனாகிய தசரதன், இப்பொழுது பரசுராமன் எதிரில் பெண்களைப் போல நடந்து கொள்கிறான். பரசுராமன் தசரதனை ஏறிட்டுக் கூடப் பார்க்க மறுக்கிறான் என்றாலும், அவன் எதிரே வழியை மறித்துக் கொண்டு தசரதன் பேசுவது. வியப்பையும் நகைப்பையும் தருகிறது: -