பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்டம்

131



தூண்டியது; மூச்சுச் சிறிது நேரம் நின்றுவிட்டது அவன் சொற்களை ஆர்வத்தோடு எதிர்பார்த்தனர்.

“'நான் இராமனை அழைத்துவர ஏகுகிறேன்; அவன் வாராவிட்டால் தவசியர் நால்வர் ஆவோம் என்பது உறுதி; சடைமுடியைத் தரித்துச் சந்நியாசியராய் அங்கு அவனோடு காலம் கடத்துவோம்; அதற்கும் அனுமதி இல்லை என்றால், என் உயிர் என்னிடம் அனுமதி பெற்றுச் சென்றுவிடும்” என்றான்.

அவன் திண்மையைக் கண்டு நாட்டோர் திகைத் தனர்; உறுதியாய் நன்மை விளையும் என்று நம்பினர்.

“தனி ஒருவனால் இதைச் சாதிக்க முடியாது; இராமன் திரும்பி வரும்போது அரச மரியாதையோடுதான் வர வேண்டும்; அவனைப் பேரரசனாய்ப் பார்க்க வேண்டும்; நால்வகைப் படையும் அவனைத் தொடர்ந்து வர வேண்டும்” என்றான்.

நகரமாந்தரும் நல்லோர் அனைவரும் உடன் செல்லப் புறப்பட்டனர்; சுற்றத்தவரும் உடன் செல்லப் புறப்பட்டனர்; அன்னையரும் அங்கிருந்து அடையும் பயன் இல்லை ஆதலின், அவர்களும் உடன் செல்ல எழுந்தனர்; கைகேயியும் எதிர் நீச்சல் அடிக்க முடியாமல் வெள்ளத்தில் ஒருத்தியாய்க் கலந்து கொண்டாள்; அவள் எடுத்த முடிவு தோற்றுவிட்டது; குதிரையைக் குளத்திற்குக் கொண்டு போனாள்; குதிரை நீர் குடிக்க மறுத்துவிட்டது; குதிரை அவளைத் தட்டி அவளுக்குக் குழிபறித்துவிட்டது.

கூனி படைத்த கைகேயி மாய்ந்துவிட்டாள்; ‘மா கயத்தி’ என்று பேசப்பட்ட தீமை அவளிடமிருந்து