பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரணிய காண்டம்

169



இதைவிட நம் மரபுக்கு ஒர் இழிவு உண்டோ? கரனும் துஷணனும் உயிர் இழந்தனர் என்றால் இதைவிட அவமானம் வேறு என்ன இருக்கிறது? இருகை சுமந்தாய்!’ இனிதின் இருந்தாய்! கேட்டால் ‘தவம் செய்கிறேன்’ என்கிறாய்; ஒருவன் கட்டமைந்த வில்லால் இருவர் உயிரைப் பருகினான்; வெம்பிய மனத்தோடு வேகின்றேன், அவர்கள் எனக்கு ஒப்பிலார், என்பதால் போர் செய்யத் தயங்குகிறேன். பவழம் போன்ற செவ்வாய் வஞ்சியை வவ்வ உன் துணை நாடுகிறேன்; இப்பழியை நீதான் தீர்த்துத் தரவேண்டும்” என்றான்.

எரியும் நெருப்பிலே அரக்கை உருக்கிச் செவியில் கொட்டியதுபோல் இச் இச்சொற்கள் கடுமையாக இருந்தன; காதுகளைப் பொத்திக் கொண்டு அச்சம் நீங்கிச் சினத்தோடு சீரிய உரைகள் பேசினான் மாரீசன்.

“மன்னர், நீ நின் வாழ்வை முடித்தாய்; மதி அற்றாய், நீ தேடிக் கொண்ட அழிவு அன்று இது. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டுகிறது; செவிக்கு இன்னா எனினும், உனக்கு இதம் வேண்டி இவை சொல்கிறேன்.

“நீ தவம் செய்து பெற்ற செல்வ மெல்லாம் அவமே அழிக்கிறாய், இழந்தவை மீட்க முடியுமா? அறவழியில் ஈட்டிய செல்வத்தை அநீதிக்கு அழிக்கிறாய், பிறன் மனைவியைக் கவர்வது உன் பேராண்மைக்கு இழுக்காகும்; பாவமும் பழியும் சேரும், உன் கூட்டமே அழியும்;

“கரன் உன்னைவிட அதிகம் ஆற்றல் மிக்க சேனை கொண்டவன்; அவனை எதிர்க்க முடியாமல் தேரோடு