பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரணிய காண்டம்

183



களையும் கடந்து பதினெட்டு யோசனை தூரம் நடந்து சென்றனர். பறவைகள் தங்குகின்ற குளர்ச்சிமிக்க சோலை ஒன்றில் புகுந்தனர். மாலைப்பொழுது மறைந்து இருட்பொழுது வந்து சேர்ந்தது. அங்கு ஒரு பளிக்கறை மண்டபத்தில் இருவரும் தங்கினர். “வீரனே! குடிப்பதற்கு நீர் வேண்டும் கொண்டு வருக” என்றான். இராமனை விட்டு இலக்குவன் தனியே சென்றான்.

மற்றுமொரு சூர்ப்பனகை

எங்குத் தேடினும் நீர் கிடைக்கவில்லை. சிங்கம்போல் காட்டில் அவன் திரிந்து கொண்டிருந்தான். அங்கு அவ்வனத்தில் இரும்பு போன்ற முகத்தை உடைய அயோமுகி என்னும் அரக்கி இவனைக் கண்டாள்; கண்டதும் இவன் மீது விருப்பம் கொண்டாள். இவன் “மன்மதனாக இருக்கிறான்” என்று நினைத்தாள்; தன் செருக்கையும் கொடுமையையும் தணித்துக் கொண்டாள்.

“இவனை அணைத்துக் கொள்வேன்; மறுத்தால் அடித்துக் கொல்வேன்” என்று முடிவுக்கு வந்தாள்.

அவன் தன்னை ஏற்க மறுத்தால் அவனைத் துக்கிச் செல்வது என்ற முடிவுக்கு வந்தாள். இலக்குவனைச் சந்தித்தாள், நெருங்கி அணைந்தாள்.

“இருட்டில் முரட்டுத் தனமாக மருட்டும் நீ யார்?” என்று கேட்டான்.

“நான் உன்னைத் தழுவ விருப்பம் கொண்டேன்; உன்னை அடையாவிட்டால் நான் உயிர்விடுவது உறுதி” என்றாள்.