பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரணிய காண்டம்

187



“அரக்கர் செயலாய் இருந்தால் அவர்கள் முரசும் சங்கும் முழங்க வேண்டுமே என்று கூறி மறுத்தான் இலக்குவன்.

“நம்மைப் பிணித் திருப்பவை மந்தர மலையைச் சுற்றிய வாசுகி என்ற பாம்பாகத்தான் இருக்க வேண்டும்” என்று இலக்குவன் கூறினான். இருவருமே இரண்டு யோசனை தூரம் நெருங்கிச் சென்று அவ்வரக்கனை நேருக்குநேர் சந்தித்தனர். “இவனிடமிருந்து உயிர் தப்ப முடியாது” என்று இராமன் முடிவு செய்தான்; அதற்குத் தன்னை ஆளாக்கிக் கொண்டான்; இலக்குவனை மட்டும் தப்பித்துச் செல்லும்படி வேண்டினான்.

“சீதையைப் பிரிந்தேன்; சடாயுவை இழந்தேன்; கொடும்பழிக்கு உள்ளாகிவிட்டேன்; இனியும் உயிர் வாழ்வது தக்கதன்று; இந்தப் பூதத்துக்கு உணவு ஆவதுதான் உத்தமம்; எந்த முகத்தை வைத்துக் கொண்டு சனகன் முகத்தைப் பார்க்கமுடியும்? அயோத்திக்குத் திரும்பச் சென்றால் ஆட்சியைப் பிடித்து அரசாள ஆசையுடையவன் என்று பேசுவர்”.

“மனைவியைக் காக்கத் திறனில்லாத இவன், வாழ்ந்து என்ன பயன்? மானங்கெட்டவன்; என்று பேசுதற்கு முன் உயிர்விட்டால் என் பழி தீரும்” என்று கூறினான்; இலக்குவன் அதை மறுத்து ஆறுதல் கூறினான்.

“துயரத்தில் உன்னைத் துவளவிட்டு நான் மட்டும் எப்படித் திரும்புவேன்? என் அன்னை சுமத்திரை, ‘முன்னம் முடி; இறப்பை ஏற்றுக்கொள்’ என்று சொல்லி