பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிட்கிந்தா காண்டம்

219



எல்லாம் கடந்து சென்றால் தமிழ் நாட்டின் வட எல்லை யாகிய திருவேங்கட மலையை அடையலாம். தமிழ் நாட்டில் காவிரி யாற்றினனக் கடந்தால், மலை நாடும் பாண்டிய நாடும் வரும்; அவற்றை எல்லாம் கடந்தால் ‘மயேந்திரம்’ என்னும் மலை தென்கருங்கடலை அடுத்து வரும்; அங்கிருந்து இலங்கைக்குச் சென்று விடலாம்” என்று வழி கூறினான்.

இராமன், சீதையின் அங்க அடையாளங்களைத் தக்க உவமைகள் கொண்டு அனுமனுக்கு விளக்கினான்; பாதாதி கேசம்வரை அவள் அழகினைப் விவரித்துக் கூறத் தொடங்கினான்.

“அவள் காலடிகள் தாமரையை ஒக்கும் என்றால், புறவழகு ஆமை போன்றது; கனைக்கால்களுக்கு வரால் மீனும், அம்பறாத் துணியும், சூல்கொண்ட நெற் பயிரும் உவமையாகும்; தொடைகள் வாழைகளைப் போன்றன; சீதையின் இடை வெளிப்படாதது; அதற்கு உவமை கூற இயலாது, வயிற்றுக்கு உவமை ஆலிலை; உந்திச்சுழி கங்கையாற்றின் நீர்ச்சுழி போன்றது; கைகள் காந்தள்மலர் போன்றன; தோளுக்கு மூங்கிலையும் கரும்பையும் கழுத்துக்குப் பாக்கு மரத்தினையும் உவமை கூறலாம்; சங்கும் உவமை யாகலாம்; பச்சோந்தி, எள் பூ, குமிழமலர் அவள் மூக்குக்குச் சரியான உவமைகள் ஆகும். செவிக்கு வள்ளைக் கொடி கண்களுக்குக் கடல்; புருவங்களுக்கு வாள்; நெற்றிற்குப் பிறைச்சந்திரன், ஒரளவு முகத்துக்குத் தாமரை, கூந்தலுக்கு மேகம்; நிறத்துக்குப் பொன் உவமை களாகும். இவ்வாறு அவள் அழகைப் புனைந்துரைத்து, எல்லா வகையிலும் அழகிற் சிறந்த நங்கை ஒருத்தி