பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

கம்பராமாயணம்



தென்பட்டால் அவளைச் சீதை என்று தீர்மானிக்கலாம் என்று தெரிவித்தான். மேலும் அடையாளத்துக்காக இந்தச் செய்திகளையும் சொல்லி அனுப்பினான்.

“விசுவாமித்திரரோடு மிதிலையை அடந்தபோது, கன்னிமாடத்தில் அன்னம் ஆடும் முற்றத்தில் அருகில் அவளைக் கண்டதையும், ‘வில்லை முறித்தவன் முனிவரோடு வந்த வீரனாக இல்லை என்றால் உயிரை விடுவேனே’ என்று அவள் தன்னைப் பார்த்த செய்தியையும், காட்டுக்குப் புறப்பட்டபோது ‘பிரிவினும் சுடுமோ பெருங்காடு’ என்று அவள் கேட்டதையும், “யான் அலாதன எல்லாம் உனக்கு இனியவோ” என்று கேட்டதையும், அயோத்தியை விட்டு நீங்கு தற்கு முன், “காடு வந்துவிட்டதோ” என்று அவள் கேட்டதையும், மற்றைய செய்திகளையும் சொல்லி அனுப்பினான்.

சாம்பவான், அனுமன் முதலிய படைத்தலைவர் களோடு, பெரும்படையோடும் அங்கதன் தென்திசை நோக்கிச் சென்றான்.

பிலம்புகுந்து வெளிவந்த கதை

விந்தன் என்பவன் ஏனைய திசைகளை நோக்கிச் செல்லும் படைகளுக்குத் தலைமை தாங்கினான். வளமான தமிழ் பேசும் தென்திசை சென்றவர், முதன் முதலில் விந்தமலையை அடைந்தனர்; நருமதை ஆற்றையும், ஏமகூட மலையையும், கடந்து, ஒரு பாலைவனத்தைக் கண்டனர்; அப்பாலையின் வெப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்ள ஒருபிலத்தின் உள்ளே சென்றனர்; “பாலையில் நடந்தால் மடிவது உறுதி; அதனால், பிலத்து வழியே அது