பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிட்கிந்தா காண்டம்

221


காட்டும் புதிய பாதையில் செல்லலாம்” என்று முடிவு செய்தனர்.

இருட்டு வழியில் அவர்கள் குருட்டு மனிதர் ஆகி விட்டனர். அனுமன் பேருருக் கொண்டான்; அவன் வாலைப் பிடித்துக்கொண்டு மற்றவர் பின் தொடர்ந்தனர். அனுமன் கையால் தடவிக்கொண்டு விரைந்து நடந்து சென்றான். அந்தப் பிலத்துள் அழகிய நகர் ஒன்றனைக் கண்டனர். அது ஒளி பெற்றுத் திகழ்ந்தது; கவர்ச்சி மிக்கதாய் இருந்தது; அங்கு உண்ண உணவும் தின்னப் பலவகைக் கனிகளும் இருந்தன; குயிலும் மயிலும் ஏனைய வண்ணப் பறவைகளும் இருந்தன; பெண்கள் அழகாய்த் தோற்றமளித்தனர். ஆனால் அவற்றிற்கு உயிர் ஒட்டம் என்பதே காணப் படவில்லை; அனைத்தும் ஒவிய வடிவங்களாய் இருந்தன.

அது மயன் என்னும் அசுரத் தச்சனால் நிருமணிக்கப் பட்ட இடம்; அதிலிருந்து தப்பி வெளி யேற முடியாமல் திகைத்தனர்; அனுமன் அவர்களுக்கு ஆறுதல் கூறி எப்படி யும் வெளியேற்றுவதாக உறுதி தந்தான். அப்பொழுது உயிர் ஒட்டம் உடைய அழகிய நங்கை ஒருத்தி, அழகிய சடையுடன் ஒளி பெற்ற உருவத்தோடு காணப்பட்டாள்; அவள் ஒரு மாபெரும் தவசியாய்த் திகழ்ந்தாள்; அவள் பெயர் சுயம்பிரபை என்று அறிந்தனர்.

அவள், விசித்திரமான கதை ஒன்றைச் சொன்னாள்.

“மயன் என்னும் அசுரத் தச்சனுக்கு இந்நகர் பிரமனால் அளிக்கப்பட்டது. அவன் தேவப் பெண் களுள் ஒருத்தியைக் காதலித்தான். அந்தப் பெண் இந்தச்