பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

கம்பராமாயணம்



சுயம்பிரபை என்பவளின் உயிர்த் தோழி யாவாள். அந்தத் தெய்வத் தச்சன் தன் காதலியொடு இந்நகருக்கு வந்தான்.

அன்றில் பறவை என இணைந்து இன்பம் அடைந்த காதலர் அங்கேயே நிலைத்து வாழ்ந்தனர். இவளும் அவர்களோடு தங்கிவிட்டாள். இந்திரன் அந்தத் தெய்வப் பெண் இருக்குமிடம் தேடி, அங்கு வந்து அந்த அசுரனைக் கொன்று அப்பெண்ணை மீட்டுச் சென்றான்.

அவர்களுக்குத் துணையாய் இருந்த சுயம்பிரபை என்பவளை அந்நகரத்துக்குக் காவலாய் இருக்கும்படி ஆணையிட்டு இந்திரன் அந்த இடத்தைவிட்டு நீங்கினான். விமோசனம் அறியாமல் வேதனையில் உழன்ற அவளுக்கு இராமன் தூதுவராய் அனுமன் முதலிய வானரர் வரும் போது வழிபிறக்கும் என்று இந்திரன் சாபவிமோசன் தந்தான்.

சுயம்பிரபை இராமன் துதுவனாய் அனுமன் வந்தான், என்பதனால் எல்லையற்ற மகிழ்ச்சியை அடைந்தாள், எனினும், அவளும் அங்கிருந்து வெளியேற வழி தெரியாமல் தடுமாறினான்.

அனைவரும் அனுமன் உதவியை நாடினர். ‘அஞ்சற்க’ என்று சொன்ன அஞ்சனை மைந்தன் அனுமன், விண்ணுயர வளர்ந்து பேருருவம் கொண்டான்; மேலே திறந்து வெளியே வந்தான்; திருமால் வராக அவதாரம் எடுத்ததுபோலப் பிலத்தைப் பிளந்து மேலே வந்தான். சுயம்பிரபை விடுதலை பெற்றவளாய் விண்ணுலகம் போய்ச் சேர்ந்தாள். வானவர், அனுமன் அளவற்ற ஆற்றலை வியந்து பாராட்டினார்.