பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

கம்பராமாயணம்


சென்றதாகவும், சூரியனின் வெப்பம் தாங்காமல் சடாயு இறக்கைகள் தீய உடல் காய வேதனைப்பட்டதாக வும், அவனைக் காப்பதற்காக அவனுக்கு மேலே தான் பறந்து, தன் சிறகுகளை விரித்து, அவனுக்கு நிழல் உண்டாக்கி யதாகவும் தெரிவித்தான். கதிரவன் வெம்மையால் சிறகுகள் தீய்ந்து தரையில் விழுந்தான் என்பதையும் “இராமன் தூதுவனான அனுமனொடு வானரப் படைகள் இராமன் திருப்பெயரைச் சொல்லும் அப்பொழுது சிறகுகள் தளிர்க்கும்” என்று சூரியன் சொல்லி இருந்தான் என்பதை யும் தெரிவித்தான். அதன்படி வானரரை இராமன் திருப் பெயரைக் கூட்டமாகக்கூடி விளிக்குமாறு சம்பாதி வேண்டினான். அவ்வாறே அவர்கள் வாயினிக்க, இராமன் திருப்பெயரைச் சொல்லச் சம்பாதியின் சிறகுகள் தழைத்து வளர்ந்தன. சம்பாதி இழந்த வலிமையை மீண்டும் பெற்றான்; கழுகுகளுக்குத் தலைவனாய் மீண்டும் அவனால் செயல்பட முடிந்தது.

“எதற்காக அவர்கள் அங்கே வந்தனர்?” என்ற செய்தியைக் கேட்டறிந்தான். அவர்கள் சீதையைத் தேடித் தென்திசை வந்ததாகத் தெரிவித்தனர்.

சீதையை இராவணன்தான் எடுத்துச் சென்றான், என்பதையும், தென்னிலங்கையில் அசோக வனத்தில் அவனைச் சிறை வைத்திருக்கிறான் என்பதையும் சம்பாதி உறுதியாய்ச் சொன்னான். தான் அதை உயரே இருந்து காண முடிகிறது என்பதையும் கூறினான்.

“இலங்கைக்கு அனைவரும் செல்வது இயலாது” என்றும், ‘அவர்களுள் ஆற்றல் மிக்க ஒருவன் மட்டும்