பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

கம்பராமாயணம்



கடக்க முடியுமா?” என்று ஆராய்ந்தனர். அவரவர் தம் ஆற்றலையும் திறமையையும் விரித்துரைக்க முயன்றனர்.

நீலன், “என்னால் கடலைக் கடக்க இயலாது” என்று தெளிவுபடக் கூறினான். அங்கதன் “அக் கரைக்குச் செல்லும் ஆற்றல் எனக்கு உண்டு; திரும்ப இக்கரைக்கு வர முடியும் என்று கூற என்னால் முடியாது” என்றான்.

சாம்பவானும் தனக்கு ஆற்றல் இன்மையை வெளிப்படுத்தினான்; மேருமலை இடறத் தன்கால் முடம் பட்டுவிட்டது; அனுமனே ஆற்றல் மிக்கவன், செல்லத் தக்கவன் அவனே என அவன் விரித்துக் கூறினான்.

“அனுமனுக்கு நீண்ட வாழ் நாள் வரம் உள்ளது; அதனால், அவனை யாரும் அழிக்க இயலாது; சாத்திர நூல்களின் நுட்பங்களை அவன் அறிந்தவன்; திறமை யாய்ப் பேசும் சொல்வன்மை உடையவன்; எமனும் அஞ்சும் சினமும், உடல் வலிமையும், சிவனைப் போலக் கடும்போர் செய்யும் திறமும் படைத்தவன்; கடல் கடந்து திரும்பும் ஆற்றலும் அனுமனுக்குத்தான் உண்டு, இராமனும் அனுமனிடமே மிக்க நம்பிக்கை வைத்திருக்கிறான்;

“எண்ணிச் செயல்படும் நுண்ணறிவும், எதையும் சாதிக்கும் திண்மையும் அனுமனிடமே உள்ளன வயதாலும் சாம்பவானை விட மிகவும் இளஞன் பேருருவம் எடுத்து மண்ணும் விண்ணும் வியாபிக்குப் பேராற்றல் அவனிடமே உள்ளது; அமைச்சனுக்கு உரிய அறிவும், படைத் தலைவனுக்கு உரிய வீரமும், அறிஞர்க்கு