பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

கம்பராமாயணம்



“பொழில் சூழ்ந்த கடலை உடைய இலங்கை யில் உனக்கு என்ன வேலை?” என்று கேட்டான்.

“காலை மாலை இங்கு நீ காவல் நிற்பது ஏன்?”” என்று கேட்டான்.

“அது என் கடமை; நான் காவல் தெய்வம்; நீ இதைக் கடக்க முடியாது” என்றாள். இருவரும் கை கலந்தனர். அவன் அவள் தாக்க அவள் அழகிய பெண்ணாய் அவன் முன் நின்றாள்

“கண்ணைப் பறிக்கும் அழகுடைய பெண்ணே நீ யார்?” என்றான்.

“எழில் கொஞ்சம் நகரைப் படைத்த நாளில் நான்முகன் என்னைக் காவலுக்கு வைத்தான்; அவன் ஏவலுக்குப் பணிந்து உன்னை எதிர்த்து நின்றேன்; அஞ்சனை மகனே! உன் அங்கைபட்டதும் என் கடமையை முடித்துக் கொண்டேன்; கொடுமை நீங்கி அறம் தழைக்கும்; இனித் தீமைகள் ஒழியும் காலம் அணுகிவிட்டது. இச் சித்தரநகர், இனிச் சிதைவடையும்” என்று கூறி வழி விட்டு, விடுதலை பெற்றாள்.

ஊர் தேடுதல்

பெண்ணை ஒதுக்கி வாழ்ந்தவன், பெண்ணைத் தேடும் பணியில் அமர்ந்தான். இது ஒரு புதுமையாய் இருந்தது. இராமன் உரைத்த அடையாளம் அவனுக்கு வரைபடமாய் விளங்கியது. சீதை என்னும் கோதை, எழில் மிகு ஒவியமாய் அவன் மனத்தில் பதிந்திருந்தாள். வழியில்