பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர காண்டம்

235



காணும் பெண்களை அவன் விழிகள் சந்தித்தன. அழகு என்பதற்கு அடையாளம் எதுவும் அவன் கண்ணில் படவில்லை. அரக்கியர் இடையே அணங்கனைய மகளாகிய சீதையைக் காண முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

தப்பித் தவறி நங்கையர் இளமையோடும் எழிலோடும் தென்பட்டால் தான் எழுதி வைத்த சித்திரம் கொண்டு அவர்களை விசித்திரமாய்ப் பார்த்து வந்தான்.

உறங்குகின்ற கும்பகருணன்

அநுமன் பார்வை கும்பகருணன் மாளிகைப் பக்கம் சென்றது. மலை ஒன்று உருண்டு கிடப்பதைப் பார்த்தான்; அதன் தோற்றத்தைக் கண்டு வியந்தான்; பேருருவம் படைத்த அது நின்றால் எப்படி இருக்கும்? என்று நினைத்தான். மலையின் உருவை அவன் உருவில் வைத்துப் பார்த்தான்; தின்பதற்கே பிறந்தவன் அவன், என்பதை அறிந்தான். ஊனும் கள்ளும் உண்டபின் அவன் உறக்கம் கொண்டவனாய்க் காணப்பட்டான். அவன் குறட்டை விட்டுக்கொண்டு உறங்குவதைப் பார்த்தான். ‘பேரரசன் ஒருவன் இப்படிப் பெருந்துயில் பெற்றிருக்க முடியாது’ என்பதால் அவன் இராவணனாய் இருக்க முடியாது என்று தெளிந்தான்.

வீடணன் இருக்கை

அடுத்து அவன் இளவல் வீடணன் மாளிகையை அடைந்தான்; வனப்பும் அழகும் அந்த மாளிகை பெற்றிருந்தது; அங்கே அரக்க வடிவில் ஒரு அசோகனைக்